ஈரானிய ஆளில்லா விமானங்கள் மீது ஆர்வம் காட்டும் இந்தியா !!

  • Tamil Defense
  • October 22, 2022
  • Comments Off on ஈரானிய ஆளில்லா விமானங்கள் மீது ஆர்வம் காட்டும் இந்தியா !!

ஈரானிய ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் யாஹ்யா ரஹூம் சஃபாவி சமீபத்தில் ஈரான் ஆளில்லா விமான தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறி உள்ளதாகவும் சுமார் 22 நாடுகள் ஈரானிய ஆளில்லா விமானங்கள் மீது ஆர்வம் காட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ அகாடமியில் உரையாற்றிய அவர் ஈரானிய ராணுவம் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தை சிறப்பாக பயன்படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார், இவர் ஈரானிய மத தலைவர் அயத்தொல்லா கொமேனியின் ராணுவ ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பேசும்போது இந்தியா, அர்மீனியா, வெனிசுலா, தஜிகிஸ்தான், செர்பியா உள்ளிட்ட சுமார் 22 உலக நாடுகள் ஈரானிய ஆளில்லா விமானங்கள் மீது ஆர்வம் காட்டி உள்ளதாகவும் அதற்கு உக்ரைன் போர் தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.