சீனா மற்றும் பாகிஸ்தானை மனதில் வைத்து சுமார் 350 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய தரைப்படை திட்டம் !!

  • Tamil Defense
  • October 18, 2022
  • Comments Off on சீனா மற்றும் பாகிஸ்தானை மனதில் வைத்து சுமார் 350 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய தரைப்படை திட்டம் !!

இந்திய தரைப்படை சீனா மற்றும் பாகிஸ்தானை மனதில் வைத்து சுமார் 350 நடுத்தர உயரம் மற்றும் அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அதாவது 17/10/2022 அன்று வெளியிட்டுள்ள ஆர்வ விண்ணப்ப கோரிக்கையில் 163 அதிக உயரம் மற்றும் 200 நடுத்தர உயரத்தில் பறக்கும் ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆளில்லா விமானங்கள் பாகிஸ்தான் உடனான வடமேற்கு எல்லையோரம் மற்றும் சீனா உடனான கிழக்கு எல்லையோரம் பயன்படுத்தப்படும் எனவும் மேலும் இவற்றை பிரத்தியேகமாக எல்லை முன்னனி மற்றும் கடினமான நிலபரப்பில் பணியாற்றும் வீரர்களுக்கான சப்ளைகளை கொண்டு செல்ல பயன்படுத்தி கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆளில்லா விமானங்கள் 60% இந்திய தயாரிப்பாகவும், 10 கிலோமீட்டர் தொலைவுக்கு பறக்கும் திறன் கொண்டதாகவும், நடுத்தர உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் 20 கிலோ எடையையும் அதிக உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் 15 கிலோ எடையையும் சுமந்து கொண்டு பறக்க வேண்டும் என்பதும் நிபந்தனை ஆகும்.