விரைவில் வெளிவரும் இந்தியாவின் புதிய சக்திவாய்ந்த அணு ஆயுத ஏவுகணை ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • October 19, 2022
  • Comments Off on விரைவில் வெளிவரும் இந்தியாவின் புதிய சக்திவாய்ந்த அணு ஆயுத ஏவுகணை ஒரு பார்வை !!

இந்தியா விரைவில் தனது புதிய நீர்மூழ்கியில் இருந்து ஏவப்படும் அணு ஆயுத ஏவுகணையை உருவாக்க உள்ளது தற்போது அதனுடைய சில சிறப்பம்சங்கள் தற்போது வெளியாகி உள்ளது அவற்றை பார்க்கலாம்.

இது IC SLBM Intercontinental Submarine Launched Ballistic Missiles அதாவது நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பலிஸ்டிக் ஏவுகணை ரகத்தை சேர்ந்ததாகும், இதன் தாக்குதல் வரம்பு சுமார் 6000 முதல் 8000 கிலோமீட்டர் ஆகும்.

மூன்று நிலை கொண்ட இந்த ஏவுகணை 12 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் கொண்டதாகும் 2000 – 3000 கிலோ எடை கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டதாகும்.

மேலும் இதில் 4 அணு ஆயுதங்களை MIRV Multiple Independent Re-entry Vehicle இணைத்து ஏவ முடியும் இவை ஒரு நாட்டில் நான்கு வெவ்வேறு இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் Composite Casing, Telescopic Aero Spike, ஏவுகணையின் மேலே கீழே ஆயுதம் இருக்கும் பகுதிகளில் Composite பயன்படுத்தப்படும் இந்த ஏவுகணையை DRDO வின் ANSL Advanced Naval Systems Laboratory உருவாக்கி வருவது கூடுதல் தகவல் ஆகும்.