150 – 250 கிலோமீட்டர் தொலைவு பாயும் வழிகாட்டப்பட்ட ராக்கெட்டுகளை உருவாக்கும் இந்தியா !!

  • Tamil Defense
  • October 18, 2022
  • Comments Off on 150 – 250 கிலோமீட்டர் தொலைவு பாயும் வழிகாட்டப்பட்ட ராக்கெட்டுகளை உருவாக்கும் இந்தியா !!

சீனாவின் தற்போதைய பலகுழல் ராக்கெட் அமைப்புகளுக்கு மாற்றாக இந்தியா ஏற்கனவே உள்ள பினாகா பலகுழல் ராக்கெட் அமைப்புகளில் வழிகாட்டப்பட்ட மற்றும் தாக்குதல் தொலைவு அதிகபடுத்தப்பட்ட ராக்கெட்டுகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளது.

பினாகா ராக்கெட் அமைப்புகளை தயாரித்து வரும் Solar Induatries சோலார் குழுமத்தின் தலைவர் மணிஷ் சத்யநாராயணன் நுவல் மேற்குறிப்பிட்ட புதிய வகை வழிகாட்டப்பட்ட பினாகா ராக்கெட்டுகள் மற்றும் புதிய தொலைவு நீட்டிக்கப்பட்ட பிரம்மாஸ் போன்ற ராக்கெட்டுகளும் தங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த புதிய வழிகாட்டப்பட்ட பினாகா பலகுழல் ராக்கெட்டுகள் 130 முதல் 150 கிலோமீட்டர் தொலைவு வரையும் புதிய வழிகாட்டப்பட்ட பிரம்மாஸ் போன்ற ராக்கெட்டுகள் 250 கிலோமீட்டர் வரையும் பாயும் என கூறப்படுகிறது.

ஒவ்வொரு பிரம்மாஸ் ஏவுகணையும் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பு கொண்டவையாகும் ஆனால் அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட வழிகாட்டப்பட்ட ராக்கெட்டுகள் ஒவ்வொன்றும் வெறுமனே 8 கோடி ரூபாய் மதிப்பிலானவை என்பது சிறப்பம்சம் ஆகும்.