அமெரிக்க கடற்படையின் பசிஃபிக் கட்டளையக தளபதியான அட்மிரல் சாமுயெல் பாப்பேரோ சமீபத்தில் பேசும்போது தைவானை கடல்மார்க்கமாக சீனா முற்றுகையிட்டால் அதனை அமெரிக்க கடற்படை முறியடிக்கும் என கூறியுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரான லாய்டு ஆஸ்டின் ஹவாய் மாகாணத்தில் உள்ள அமெரிக்க பசிஃபிக் கட்டளையகத்திற்கு சென்ற போது செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது அட்மிரல் சாமுயெல் சீன கடற்படையிடம் ஒரு கடல்சார் முற்றுகை இடுவதற்கு தேவையான கப்பல்கள் மற்றும் கலன்கள் தாராளமாக உள்ளன, ஆனால் அதனை அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் முறியடிக்குமா என்றால் ஆம் முடியும் என்றார்.
அதே நேரத்தில் அமெரிக்க கடற்படை தனியாகவே இதனை முறியடிக்க முடியும் அதற்கு தேவையான தாக்குதல் திறனும், நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு திறன்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
சமீப காலமாக அமெரிக்க கடற்படை தொடர்ந்து தென் சீன கடல் பகுதியிலும் குறிப்பாக தைவான் ஐலசந்தி பகுதியிலும் தனது நடவடிக்கைகளை அதிகபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.