அதிநவீன ISTAR ரக கண்காணிப்பு விமானங்கள் வாங்க தீவிரம் காட்டும் விமானப்படை !!

இந்திய விமானப்படை அமெரிக்காவிடம் இருந்து ISTAR Intelligence Surveillance Target Acquisition மற்றும் Reconnaissance அதாவது உளவு, கண்காணிப்பு, இலக்கு அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் அதிநவீன விமானத்தை வாங்க விரும்புகிறது.

தரையில் உள்ள எதிரி நடமாட்டம் நிலைகள் குறித்த தகவல்களை இந்த விமானம் பெற்று அனுப்பும் இத்தகைய விமானம் நவீனகால போர் முறைகளில் மிகவும் தவிர்க்க முடியாதது என்றால் மிகையல்ல ஆகவே இவற்றை வாங்க தீவிரம் காட்டி வருகிறது.

இத்தகைய ஐந்து ISTAR ரக விமானங்களை வாங்க இந்திய விமானப்படைக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இத்தகைய விமானங்களில் செயற்கை அறிவாற்றல் திறன் மற்றும் பல சென்சார் அமைப்புகள் இருக்கும் அவற்றை இந்தியாவிலேயே தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருவது கூடுதல் சிறப்பாகும்.