இந்திய தரைப்படை தன்னுடைய HAL PRACHAND ப்ரச்சந்த் ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை அசாம் மாநிலத்தில் சீன எல்லையோரம் களமிறக்க உள்ளது.
அசாம் மாநிலத்தின் மிசாமாரி பகுதியில் இவை நிலைநிறுத்தப்பட உள்ளன, கடந்த ஆண்டு இங்கே ஒரு புதிய வான்படை ப்ரிகேடை தரைப்படை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல் பெங்களூர் நகரில் தோற்றுவிக்கப்பட்ட 351ஆவது தரைப்படை வான்படை அணியிடம் தான் முதல் மூன்று ப்ரச்சந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்பட்டன.
விரைவில் நான்காவது ஹெலிகாப்டரும் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில் இந்த 351ஆவது படையணி கிழக்கு பிராந்திய கட்டளையகத்தின் கீழ் இயங்கும் புதிய ஏவியேஷன் ப்ரிகேடின் கட்டுபாட்டில் இயங்கும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
தற்போது மேற்குறிப்பிட்ட 351ஆவது ஏவியேஷன் படையணி பெங்களூர் நகரில் உள்ளது, நான்காவது ஹெலிகாப்டரை பெற்றதும் மிசாமாரி நோக்கி நகர்த்தப்படும் மேலும் அடுத்த மாதம் ஐந்தாவது ஹெலிகாப்டரை பெற்று கொள்ளும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.