பாதுகாப்பு கண்காட்சியில் அறிமுகமாகும் சுதேசி பயிற்சி போர் விமானம், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து !!

  • Tamil Defense
  • October 20, 2022
  • Comments Off on பாதுகாப்பு கண்காட்சியில் அறிமுகமாகும் சுதேசி பயிற்சி போர் விமானம், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து !!

இந்தியாவின் HAL Hindustan Aeronautics Limited நிறுவனம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரித்த HTT-40 எனும் சுதேசி பயிற்சி போர் விமானம் அஹமதாபாத் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அங்குள்ள இந்தியா அரங்கில் வைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்க உள்ளார் இதைதொடர்ந்து விரைவில் ஒப்பந்தம் இந்திய விமானப்படையுடன் 70 விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த HTT-40 விமானங்களில் அமெரிக்காவின் Honeywell நிறுவனம் தயாரிக்கும் TPE331-12 ரக என்ஜின்கள் பொருத்தப்படும், 500 கோடி நிதியில் தயாரிக்கப்பட்ட இந்த விமானத்தின் 70 சதவிகித பாகங்கள் இந்தியா தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானப்படையின் பயிற்சி விமானிகள் இந்த HTT-40 விமானங்களில் பயிற்சி பெற்ற பிறகு கிரண் மற்றும் Hawk AJT ரக விமானங்களில் பயிற்சி பெறுவர் பின்னர் தான் இந்திய விமானப்படையின் போர் விமானங்களை ஒட்ட அனுமதிக்கப்படுவர்.

இந்த HTT-40 பயிற்சி போர் விமானம் அடிப்படை பறத்தல் பயிற்சி, ஏரோபாடிக்ஸ் எனப்படும் பறத்தல் வித்தைகள், பிற விமானங்களுடன் நெருங்கி பறக்கும் முறைகள், இரவில் பறத்தல், கருவிகளை இயக்கி படித்தல் மற்றும் வழிகாட்டியை இயக்கி படித்தல் போன்றவற்றை மேற்கொள்ள உதவும்.

அதிநவீன தொழில்நுட்பங்களான புத்தம் புதிய ஏவியானிக்ஸ், குளிரூட்டப்பட்ட விமானி அறை, தப்பிக்கும் இருக்கை போன்ற அம்சங்களுடன் சர்வதேச தரத்திற்கு கட்டமைக்கப்பட்டு உள்ளது,வரலாற்று சாதனையாக தயாரிக்கப்பட்ட ஆறே வருடங்களில் அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் விமானம் என்ற பெயரையும் இது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.