காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான ஜெர்மனியின் நிலைப்பாடு கண்டனம் தெரிவித்த இந்தியா !!

சமீபத்தில் ஜெர்மனியின் பான் நகரில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவால் பூட்டோ சர்தாரி மற்றும் ஜெர்மானிய வெளியுறவு அமைச்சர் அன்னலேனா பேர்பாக் ஆகியோர் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது ஜெர்மானிய வெளியுறவு துறை அமைச்சர் அன்னலேனா பேர்பாக் காஷ்மீர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு ஒரு முடிவை காண வேண்டும் என வலியுறுத்தி பேசினார் இது பல ஆண்டு காலமாக பாகிஸ்தானுடைய கோரிக்கை மற்றும் நிலைப்பாடு ஆகும்.

இந்த நிலையில் ஜெர்மானிய வெளியுறவு அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சர்வதேச சமுகத்தின் கவனம் மிக்க தீவிரமான நாடுகள் அனைத்தும் பயங்கரவாதம் குறிப்பாக எல்லை தாண்டிய பயங்கரவாதவாதத்தை தான் கண்டிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இதனை காரணமாக வைத்து பல ஆண்டுகளாக பயங்கரவாதம் நடைபெற்று வருகிறது என்பதையும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை போன்றவை பாகிஸ்தானை இதற்காக விமர்சித்து உள்ளதும் சுட்டி காட்டப்பட்டுள்ளது.