பல நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் ராணுவங்களிடம் ஆயுத கையிருப்பு மிகவும் குறைந்த அளவில் உள்ளதாகவும் குறிப்பாக ஜெர்மனியிடம் அதிகபட்சமாக இரண்டு நாள் போருக்கு தேவையான ஆயுதங்கள் மட்டுமே உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஷ்யாவுடனான உறவுகள் உச்சகட்ட பதட்ட நிலையில் உள்ளதை அடுத்து உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பியதில் நேட்டோ நாடுகளின் ஆயுத கையிருப்பு கணிசமான அளவில் குறைந்துள்ளதும் ஒட்டுமொத்த நேட்டோ கூட்டமைப்பிற்கும் கவலையை அளிக்கிறது.
ஆகவே வியாழக்கிழமை 13/10/2022 அன்று நடைபெறும் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பின் போது ஆயுத கையிருப்பை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக நேட்டோ பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க் தெரிவித்துள்ளார்.