அருணாச்சல பிரதேசத்தில் இந்திய தரைப்படை ஹெலிகாப்டர் விபத்து 5 வீரர்கள் வீரமரணம் !!

  • Tamil Defense
  • October 22, 2022
  • Comments Off on அருணாச்சல பிரதேசத்தில் இந்திய தரைப்படை ஹெலிகாப்டர் விபத்து 5 வீரர்கள் வீரமரணம் !!

நேற்று அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மேல் சியாங் மாவட்டத்தில் டூடிங் நகரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பகுதியில் இந்திய தரைப்படையின் ரூத்ரா ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

இந்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் இருந்ததாகவும் ஐந்து பேரும் வீரமரணம் அடைந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்திய தரைப்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

சாலை வசதியற்ற இந்த பகுதிக்கு தங்களால் முடிந்த வேகத்தில் சென்ற மீட்பு குழுவினர் 2 உடல்களை மீட்டனர் மூன்றாவது உடலை மீட்க முயன்று வருகின்றனர் மேலும் இரண்டு உடல்களின் அடையாளங்கள் ஏதும் கிடைக்கவில்லை எனவும்

விமானத்தை இயக்கியவர்கள் மேஜர் விகாஸ் பம்பு மற்றும் மேஜர் முஸ்தஃபா எனவும் விபத்து நடைபெற்ற இடம் சீன எல்லையோரத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகவும் தரைப்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.