போலி இந்திய விமானப்படை அதிகாரி கைது !!

கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் BCAS Bureau of Civil Aviation Security அதாவது சிவில் வான் போக்குவரத்து பாதுகாப்பு முகமையின் அலுவலகத்திற்கு 40 வயதான ஒரு நபர் நேற்று சென்றார்.

அங்கு அவர் தான் இந்திய விமானப்படை அதிகாரி எனவும் விங் கமாண்டர் அந்தஸ்தில் பணிபுரிவதாகவும் தனது பெயர் ஃபிரோஸ் காந்தி எனவும் ஸ்பெஷல் ஏர்போர்ட் பாஸ் புதுப்பிக்க வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த சிறப்பு ஏர்போர்ட் பாஸ் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில்லை மேலும் இவரின் நடத்தையில் சந்தேகமடைந்த அதிகாரிகள் காவல்துறை உதவியோடு கைது செய்த விசாரித்த போது போலி அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.