சீன விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் முன்னாள் பிரிட்டன் போர் விமானிகள் !!

  • Tamil Defense
  • October 19, 2022
  • Comments Off on சீன விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் முன்னாள் பிரிட்டன் போர் விமானிகள் !!

சீன விமானப்படை டஜன் கணக்கான முன்னாள் பிரிட்டன் போர் விமானிகளை தனது போர் விமானிகளை பயிற்றுவிப்பதற்காக பணிக்கு அமர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிலும் பிரிட்டிஷ் விமானப்படையின் டைஃபூன், டொர்னேடோ, ஹாரியர் மற்றும் ஜாகுவார் (Eurofighter Typhoon, Harrier, Jaguar , Panavia Tornado) போன்ற போர் விமானங்களை இயக்கிய போர் விமானிகளை வருடத்திற்கு 270000 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளது.

இந்த விமானிகளில் யாரும் F-35 ஸ்டெல்த் போர் விமானத்தை இயக்கியவர்கள் இல்லை என்றாலும் இது பிரிட்டிஷ் அரசாங்கத்தை கவலைக்குள்ளாக்கி உள்ளது, இதனை தடுக்க பிரிட்டிஷ் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது ஆனால் தற்போது எந்த சட்டரீதியான வழிமுறைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முன்னாள் பிரிட்டிஷ் போர் விமானிகள் சீன போர் விமானிகளுக்கு மேற்கத்திய வான் போர்முறை பற்றியும் யுத்த தந்திரங்கள் பற்றியும் பயிற்சி கொடுத்து வருவதாகவும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி கட்டுரை வெளியிட்டுள்ளது கூடுதல் தகவல் ஆகும்.