
ஒய்வு பெற்ற ஆஸ்திரேலிய விமானப்படை போர் விமானிகள் சீன விமானப்படை போர் விமானிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும் அதை தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து ஆஸ்திரேலிய இணை பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரூ ஹேஸ்டி தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தென் ஆஃப்ரிக்காவில் உள்ள சீன விமானிகள் பயிற்சி பள்ளி வழியாக ஒய்வு பெற்ற ஆஸ்திரேலிய போர் விமானிகள் தொடர்பு கொள்ளப்பட்டு உள்ளதாகவும்
நல்ல சம்பளம் கொடுத்து சீன போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க கேட்டு கொள்ளப்பட்டதாகவும் அப்படி அழைப்பு பெற்ற இரண்டு விமானிகளை தனக்கு தெரியும் எனவும் அவர் கூறினார்.
அதே நேரத்தில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மால்ஸ் இதுகுறித்து விசாரணை நடத்த பாதுகாப்பு துறைக்கு உத்தரவு பிறப்பித்து ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளோம் ஆனால் இந்த செய்தி உண்மையாக இருந்தால் அது பெரும் அதிர்ச்சியை தரும் என கூறினார்.