ஆம்கா விமானத்தின் என்ஜின்; DRDO, GTRE மற்றும் ROLLS ROYCE அதிகாரிகள் சந்திப்பு !!

  • Tamil Defense
  • October 10, 2022
  • Comments Off on ஆம்கா விமானத்தின் என்ஜின்; DRDO, GTRE மற்றும் ROLLS ROYCE அதிகாரிகள் சந்திப்பு !!

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான DRDO Defence Research and Development Organisation அதாவது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அதன் ஒரு பிரிவான GTRE Gas Turbine Research Eastablishment எனப்படும் அமைப்பின் விஞ்ஞானிகள் குழு இங்கிலாந்து சென்றுள்ளது.

அங்கு அவர்கள் பிரிஸ்டால் நகரில் அமைந்துள்ள Rolls Royce நிறுவனத்தின் வானூர்தி என்ஜின் தயாரிப்பு பிரிவிற்கு சென்று Rolls Royce விஞ்ஞானிகளுடன் ஆம்கா ஐந்தாம் தலைமுறை போர் விமானத்திற்கான என்ஜினை இணைந்து உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் அவர்கள் Rolls Royce நிறுவனம் தேஜாஸ் மார்க் 2 போர் விமானத்திற்கு அளிக்க முன்வந்த Eurojet EJ200 Turbofan என்ஜினையும் பார்வையிட்டனர்.

இந்தியாவின் ADA எனப்படும் வானூர்தி மேம்பாட்டு முகமையானது ஆம்கா மார்க்-1 விமானத்தில் அமெரிக்க General Electrics நிறுவனத்தின் GE F414-INS6 ரக என்ஜினை பயன்படுத்தி கொள்ளவும் பின்னர் வரும் ஆம்கா மார்க்-2 போர் விமானத்தில் மேற்குறிப்பிட்ட இணைந்து தயாரிக்கப்படும் என்ஜினை பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளது.

மேற்குறிப்பிட்ட இந்திய குழுவுக்கு பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் தோரைஸ்வாமி மற்றும் DRDO நிறுவனத்தின் மூத்த விஞாஞானி திருமதி முனைவர் சந்திரிகா கவுஷிக் ஆகியோர் தலைமையேற்று சென்றது குறிப்பிடத்தக்கது.