சமீபத்தில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்தி சில வழிமுறைகள் முன்வைத்தார் அதாவது 2014ஆம் ஆண்டில் ரஷ்யா கைபற்றிய உக்ரைனிய பகுதிகளை ரஷ்யாவிடமே கொடுத்து விடுவது இரண்டாவது நேட்டோ அமைப்பில் இணைவதற்கு முயல்வதோ அல்லது அதற்கு ஆதரவான நிலைபாட்டை எடுக்கவோ கூடாது என்பதாகும்.
இதை தொடர்ந்து ஜெர்மனிக்கான உக்ரைன தூதர் ஆண்ட்ரிஜ் மெல்னிக் எலான் மஸ்கிற்கு ட்விட்டரில் மிகவும் மோசமான வார்த்தையை பிரயோகித்து வசைபாடி வம்புக்கு இழுத்தார் இதற்கு பதிலடியாக எலான் மஸ்க் உக்ரைன் நாட்டிற்கு அளித்து வந்த இலவச இணைய மற்றும் தகவல் தொடர்பு சேவையை நிறுத்தியுள்ளார்.
அதாவது தனது SpaceX நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 20,000 Starlink செயற்கைகோள்களை பயன்படுத்தி உக்ரைனில் இணைய சேவை மற்றும் உக்ரைன் படைகளுக்கான தகவல் தொடர்பு சேவைகளை இலவசமாக அளித்து வந்த நிலையில் அதனை இனியும் இலவசமாக தொடர முடியாது என அறிவித்து அமெரிக்க அரசிடம் பணம் தர கோரியுள்ளார்.
இந்த அறிவிப்பு காரணமாக உக்ரைன் படைகளுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த செயற்கைகோள்களை இயக்க 2022ஆம் ஆண்டின் மீதமுள்ள நாட்களுக்கு 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் எனவும் அடுத்த 12 மாதங்களுக்கு சுமார் 400 மில்லியன் டாலர்கள் ஆகும் எனவும் SpaceX நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்க இங்கிலாந்து மற்றும் போலந்து அரசுகள் சிறிதளவு நிதியை அளித்தாலும் SpaceX நிறுவனம் பெரும்பாலும் இலவசமாக செய்து வந்தது, ஒவ்வொரு செயற்கைகோளுக்கும் ஒரு மாதத்திற்கு சுமார் 4500 அமெரிக்க டாலர்கள் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து எலான் மஸ்கின் நிறுவனம் தங்களது சேவைகளுக்கான கட்டணத்தை செலுத்தும்படி அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனிற்கு அறிக்கை அனுப்பியுள்ள நிலையில் இந்த சேவைகளை வழங்கும் வேறு நிறுவனங்களை பார்த்து கொள்வதாக பதில் தெரிவித்துள்ளது கூடுதல் தகவல் ஆகும்.