ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த காரணத்தால் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் உலகளாவிய ரீதியில் ரஷ்யாவின் ஆயுத வாடிக்கையாளர்கள் ரஷ்ய ஆயுதங்களை பராமரிக்க திணறி வருகின்றனர்.
அந்த வகையில் எகிப்திய விமானப்படை தன்னிடம் உள்ள Mi-17 வரிசை ஹெலிகாப்டர்கள் மற்றும் Mig-29M2 ரக போர் விமானங்கள் ஆகியவற்றை பராமரிக்க திண்டாடி வருவதாகவும்,
ஆகவே தற்போது இந்திய விமானப்படையிடம் அவற்றை பராமரிப்பதற்கான உதிரி பாகங்களை தந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியாவின் HAL இந்த மிக்-29 போர் விமானங்களுக்கான Klimov RD-33 Series 3 ரக என்ஜின்களை இந்தியாவிலேயே தயாரித்து வருகிறது ஆகவே இந்த என்ஜின்களுக்கான உதிரி பாகங்களை பெற எகிப்து விரும்புகிறது.
எகிப்திய விமானப்படை சுமார் 40 Mig-29M/M2 ரக போர் விமானங்கள் மற்றும் 60 Mi-17 பயன்படுத்தி வருவதும், இந்தியா இவற்றிற்கான உதிரி பாகங்களை சொந்தமாக தயாரிப்பதால் இந்தியாவின் வானூர்திகளும் சிக்கலின்றி பராமரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.