சமீபத்தில் எகானமிக் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி இந்திய தனியார் துறை ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனமான விமான் ஏவியேஷன் சர்வீசஸ் Vman Aviation Services புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி HAL Hindustan Aeronautics Limited ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் மேற்குறிப்பிட்ட நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது அதன்படி விரைவில் ஐந்து த்ரூவ் ஹெலிகாப்டர்களை இந்த நிறுவனம் வாங்க உள்ளது.
முதல்கட்டமாக ஐந்து த்ரூவ் ஹெலிகாப்டர்கள் வாங்கப்படும் நிலையில் அடுத்த கட்டமாக மீண்டும் ஐந்து ஹெலிகாப்டர்கள் வாங்கப்படும் என தெரிகிறது அதிலும் ஏற்கனவே கடந்த ஆண்டு ஒரு Airbus H125 ரக ஹெலிகாப்டரை வாங்க ஆர்டர் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ராணுவ பயன்பாட்டில் மட்டுமே இந்த ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது முதல்முறையாக சிவிலியன் போக்குவரத்திலும் ஈடுபட உள்ளன என்பது சிறப்பான தகவலாகும்.