ரஷ்யாவையும் க்ரைமியாவையும் இணைக்கும் பாலத்தை தகரத்த உக்ரைன் ரஷ்யாவுக்கு பெருத்த அடி !!

கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யா க்ரைமியாவை கைபற்றிய பிறகு தனியாக தீவு போலிருந்த அந்த பகுதியை ரஷ்ய நிலப்பரப்புடன் இணைக்க சுமார் 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 19 கிலோமீட்டர் நீள ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாலத்தை ரஷ்யா கட்டியது.

இந்த ஆண்டு ஃபெப்ரவரி மாதம் போர் துவங்கிய பின்னர் ரஷ்யா தெற்கு உக்ரைனுக்கு இந்த பாலம் மூலமாக படைகளை க்ரைமியாவுக்கு நகர்த்தி அங்கிருந்து தெற்கு உக்ரைனில் உள்ள முன்னனி பகுதிகளுக்கு நகர்த்தி வந்தது, இது ரஷ்யாவின் படையெடுப்புக்கு இந்த பாலம் மிகவும் முக்கியமானதாகவும் இருந்த வந்த நிலையில்

தற்போது க்ரைமியாவில் இருந்து ரஷ்யா நோக்கி வந்த லாரி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதில் இந்த பாலம் உடைந்துள்ளது, கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே கட்டுபட்டுள்ள இந்த பாலத்தின் கீழ் ஆளில்லா படகில் வெடிகுண்டு பொருத்தி அனுப்பியும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து உக்ரைன் அரசின் ட்விட்டர் பக்கத்தில் எரியட்டும் என பதிவிடப்பட்டுள்ளது மேலும் உக்ரைன் அதிபரின் ஆலோசகரான மைகாயல்யோ பொடல்யாக் உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்த அனைத்தும் மீட்கப்படும் இது ஒரு ஆரம்பம் தான் எனவும் பதிவிட்டுள்ளார்.

அதே சமயம் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏப்ரலில் ரஷ்யாவின் மாஸ்கோவா கப்பலை மூழ்கடித்த சம்பவத்தை சுட்டி காட்டி ரஷ்ய சக்தியின் இரண்டு அடையாளங்களான மாஸ்கோவா மற்றும் க்ரைமியா இணைப்பு பாலம் ஆகியவை இன்று இல்லை அடுத்தது என்ன ?? என்று பதிவிட்டுள்ளது.

உக்ரைன் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை என்றாலும் இந்த பதிவுகள் உக்ரைன் தான் தாக்குதல் நடத்தியது என்பதை காட்டுகிறது இதை தொடர்ந்து ரஷ்ய அதிகாரிகள் மற்றும் க்ரைமியா அதிகாரிகள் உக்ரைன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர், தற்காலிகமாக நீர்வழி போக்குவரத்து செயல்படுத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் 70 வயதை தொட்ட அடுத்த நாள் இந்த தாக்குதல் நடைபெற்ற நிலையில் அவருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர், மேலும் விரைவில் பாலத்தை சரிசெய்ய உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.