இந்த வருடம் தைவான் சீனா போர் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை !!

  • Tamil Defense
  • October 25, 2022
  • Comments Off on இந்த வருடம் தைவான் சீனா போர் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை !!

சமீபத்தில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் அட்லாண்டிக் கவுன்சில் நடத்திய கருத்தரங்கில் அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைகள் பிரிவின் தலைவர் அட்மிரல் மைக்கேல் கில்டே கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் இந்த ஆண்டு சீனா தைவான் மீது படையெடுக்கும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் எனவும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தைவானை சீனாவுடன் இணைப்பதில் மிகவும் தீவிரமாக இருப்பதாகவும் கூறினார்.

மேலும் அவர் அமெரிக்க படைகள் இத்தகைய சூழல் ஏற்பட்டால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி பேசினார்.

இதையடுத்து சீனா அமெரிக்கா உடனான தங்கள் உறவின் அடிப்படை நாதம் தைவான் விவகாரம் எனவும் இத்தகைய புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தில் தலையிடுவது நல்லது இல்லை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.