பலிஸ்டிக் ஏவுகணையை சுட்டு வீழ்த்தி தனது பலத்தை காட்டிய சீனா !!
1 min read

பலிஸ்டிக் ஏவுகணையை சுட்டு வீழ்த்தி தனது பலத்தை காட்டிய சீனா !!

கடந்த அக்டோபர் 8ஆம் தேதி சீனா தனது எல்லைக்குள் ஒரு பலிஸ்டிக் ஏவுகணையை சுட்டு வீழ்த்தி அதாவது பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு ABM Anti Ballistic Missile சோதனையை வெற்றிகரமாக நடத்தி சீனாவின் பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு திறன்களை நிருபித்துள்ளது.

இந்த ஆண்டு சீனா இத்தகைய இரண்டு சோதனைகளை நடத்தி உள்ளது முதலாவது சோதனை ஜூன் மாதத்திலும் இரண்டாவது சோதனை தற்போது அக்டோபரிலும் நடைபெற்றுள்ளது, மேலும் 2010, 2013, 2014, 2018, 2021 போன்ற ஆண்டுகளிலும் இத்தகைய சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.

ஆக தற்போது நடைபெற்ற பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு சோதனைகளையும் சேர்த்து இதுவரை சீனா தனது வரலாற்றில் ஒட்டுமொத்தமாக சுமார் ஏழு பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு சோதனைகளை நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.