அடுத்து ஆண்டு சந்திரயான்-3 ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் !!

  • Tamil Defense
  • October 25, 2022
  • Comments Off on அடுத்து ஆண்டு சந்திரயான்-3 ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் !!

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சந்திரயான்-3 ஏவப்படும் எனவும் இந்த முறை மிகவும் திறன் வாய்ந்த Rover அதாவது ஒரு வாகனமும் உடன் அனுப்பி வைக்கப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.

இந்த திட்டத்திற்கு GSLV MK3 ராக்கெட் பயன்படுத்தப்படும் எனவும், தற்போது சந்திரயான் – 2 மூலமாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு சுற்றி வரும் செயற்கைகோள் இதற்கு உதவியாக இருக்கும்.

மேலும் இதில் அனுப்பி வைக்கப்படும் ரோவர் வாகனம் சந்திரயான் 2 திட்டத்தின் C2 ரகம் அல்ல ஆனால் மாறாக புதிய மேம்படுத்தப்பட்ட C3 ரகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரோவர் வாகனத்தை நிலவில் இறக்கும் முயற்சியில் போன முறை தோல்வி ஏற்பட்டது ஆகவே இந்த முறை நிச்சயமாக இறக்கியே தீர வேண்டும் என இஸ்ரோ திட்டமிட்டுள்ளது இதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது.

அதாவது இந்த ரோவரை நிலவில் இறக்குவதன் மூலமாக இஸ்ரோ உலகிற்கு இந்தியாவின் பிற கிரகங்கள் ஆய்வு திறனை நிருபிக்க முடியும் காரணம் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய ரோவர் அனுப்ப இது உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.