Breaking News

காலிஸ்தான் பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவளிக்கும் கனடாவின் பிரதான கட்சி !!

  • Tamil Defense
  • October 12, 2022
  • Comments Off on காலிஸ்தான் பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவளிக்கும் கனடாவின் பிரதான கட்சி !!

கனடாவின் பிரதான கட்சிகளுள் ஒன்றான NDP National Democratic Party அதாவது தேசிய ஜனநாயக கட்சி காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் கோரிக்கையான காலிஸ்தான் பிரிவினைவாதத்திற்கு ஆதரவான நிலைபாட்டை அறிவித்துள்ளது.

மேலும் அந்த கட்சியானது இந்த வாக்கெடுப்பு கனடா நாட்டு சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட சீக்கிய சமுக மக்களின் அடிப்படை உரிமைகள் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த கட்சியின் தலைவராக உள்ள ஜக்மீத் சிங் ஒரு தீவிர காலிஸ்தான் ஆதரவாளர் ஆவார் அவர் பேசும்போது காலிஸ்தான் கோரிக்கையை பிரிவினைவாதம் அல்லது பயங்கரவாதம் என முத்திரை குத்துவதை ஏற்று கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

அதே போல் Sikhs For Justice அமைப்பின் தலைவரும் காலிஸ்தான் பயங்கரவாதியுமான குர்பந்த்வந்த் சிங் பன்னூன் ஒடுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சமுகத்தின் விடுதலையில் நவம்பர் 6 நடைபெற உள்ள வாக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கும் என தெரிவித்துள்ளார்.

கனடா அரசியல் கட்சிகளின் காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு இந்தியா மற்றும் கனடா இடையேயான இருதரப்பு உறவுகளில் தீவிர விரிசலையும் மோதலையும் ஏற்படுத்தியுள்ளது.

வருகிற நவம்பர் மாதம் 6ஆம் தேதி கனடாவின் ஒன்டாரியோ நகரத்தில் காலிஸ்தான் தனிநாடு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது இதற்கு முன்னர் கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி ப்ராம்ப்டன் பகுதியில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.