இந்தியா மீது சீனாவை நோக்கி பறந்த ஈரானிய விமானத்தில் குண்டு இருப்பதாக தகவல் அனுப்பி வைக்கப்பட்ட இந்திய போர் விமானங்கள்; உச்சகட்ட உஷார் நிலை !!
ஈரானில் இருந்து சீனாவை நோக்கி பயணித்து கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்றிலு வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அந்த விமானத்தை நேரடியாக பார்வையிட இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்திய வான்வெளியில் நுழைந்த சற்று நேரத்திலேயே விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக இந்திய அதிகாரிகளுக்கு தகவல் வர பதான்கோட் மற்றும் ஜோத்பூர் தளங்களில் இருந்து சுகோய்-30 போர் விமானங்களை இந்திய விமானப்படை அனுப்பி வைத்துள்ள நிலையில் உச்சகட்ட உஷார் நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
விமானத்தில் இருக்கும் ஆபத்து உண்மையா பொய்யா மேலும் உள்ளே எந்த மாதிரியான சூழல் நிலவுகிறது என்பது தெரியாத நிலையில் இந்திய அதிகாரிகள் தொடர்ந்து விமானத்தை கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனேகமாக இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மேற்குறிப்பிட்ட ஈரானிய விமானத்தை இந்தியாவில் வலுக்கட்டாயமாக தரை இறக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.