
நேற்று மாலை கோயம்புத்தூர் நகரில் ஒரு கோவில் அருகே எரிவாயு மூலமாக இயங்கும் கார் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானது இதில் காரை ஓட்டி வந்தவர் பலியானார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர் அதாவது சம்பவ இடத்தில் இருந்து 2 கிலோ அளவிலான இரும்பு ஆணிகள் மற்றும் 2 கிலோ அளவிலான இரும்பு குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இது மாநில காவல்துறையையே பரபரப்பாக்கிய நிலையில் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு உடனடியாக கோவை விரைந்தார் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தியதில் பல்வேறு விஷயங்கள் தெரிய வந்தது.
அதில் இறந்து போன நபர் ஜமேசா மூபின் எனவும் 2019ஆம் ஆண்டு NIA அதாவது தேசிய பாதுகாப்பு முகமை விசாரித்துள்ளதாகவும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் ஜமேசா மூபினுடைய வீடு கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டைமேடு பகுதியில் உளீளதாகவும் அங்கு காவல்துறையினர் சோதனை நடத்தியதாகவும்
அவரது வீட்டில் சோதனை செய்த போது குண்டு தயாரிக்க பயன்படும் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினம் மற்றும் சல்ஃபர் போன்ற வேதி பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் ஆகவே இது தற்கொலைப்படை தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருவதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.