1 min read
ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைன் போரில் கலந்து கொள்ள திட்டம் !!
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகஷென்கோ உக்ரைன் உடனான எல்லையோரம் ரஷ்ய படைகளுடன் இணைந்து தனது படைகளையும் குவிக்க ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த வாரத்தில் பெலாரஸ் முழுவதும் இருந்து பல்வேறு ராணுவ படையணிகள் உக்ரைன் எல்லையை நோக்கி நகர்ந்த நிலையில் ரஷ்யாவுடன் இணைந்து பெலாரஸ் படைகளும் உக்ரைன் போரில் கலந்து கொள்ளுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.
அதே போல பெலாரஸ் வெளியுறவு துறை அமைச்சர் விளாடிமீர் மகேய் பெலாரஸ் ராணுவமும் சிறப்பு படைகளும் அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்க முழு தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.