நாட்டின் இரண்டாவது முப்படைகள் தலைமை தளபதியாக பொறுப்பேற்று கொண்டுள்ள ஜெனரல் அனில் சவுஹான் இந்தியாவின் முப்படைகளும் தியேட்டர் கட்டளையகங்களுக்கு தயாராகும்படி அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தான் பொறுப்பேற்று கொண்ட பின்னர் முதல்முறையாக முப்படைகளுக்கும் வழங்கிய முதல் அறிவுரையில் அவர் இது மற்றும் இது சார்ந்த விஷயங்களையும் குறிப்பிட்டுள்ளதாகவும் தொடர்ந்து பல கட்ட சந்திப்புகள் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தியேட்டர் கட்டளையகங்கள் முப்படைகள் இடையேயான ஒருங்கிணைப்பை அதிகபடுத்தும் மேலும் முப்படைகளின் ஒரே மாதிரியான தளவாடங்களை முன்று படைகளை சேர்ந்த ஏதேனும் ஒரு அதிகாரியின் கீழ் கொண்டு வருவது இதன் பிரதான நோக்கமாகும்.
மேலும் இதனால் செலவு குறையும் அதே போல் வீரர்களின் எண்ணிக்கை குறையும் ஆனால் செயல்திறன் பன்மடங்கு அதிகமாகும் முப்படை ஒற்றுமை அதிகமாகும் எதிரிகளுக்கு எதிராக சிறப்பான தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆகியவற்றையும் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.