
சமீபத்தில் இந்திய விமானப்படை மற்றும் தரைப்படையில் சேர்க்கப்பட்ட இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட HAL PRACHAND இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டரில் விரைவிலேயே சுதேசி டாங்கி எதிர்ப்பு ஏவுகணைக பொருத்தப்பட உள்ளது.
DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது துருவாஸ்திரா என அழைக்கப்படும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை உருவாக்கி உள்ளது இதனை வரும் 2023ஆம் ஆண்டு பிரச்சந்த் தாக்குதல் ஹெலிகாப்டரில் இணைக்க உள்ளனர்.
அமெரிக்கா பிரச்சந்த் ஹெலிகாப்டருக்கு அபாச்சி ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் Hellfire ஏவுகணைகளை அளிக்க முன்வந்த நிலையில் இந்தியா உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட துருவாஸ்திரா ஏவுகணைகளை தேர்வு செய்துள்ளளது.
இந்த துருவாஸ்திரா ஏவுகணைகள் 7-10 கிலோமீட்டர் தாக்குதல் தொலைவு, கொண்டவை இது அமெரிக்க Hellfire ஏவுகணைகளை விடவும் சற்று கூடுதலாகும், இந்தியா SANT எனும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை உருவாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.