அடுத்த வருடம் வெளிவரும் அதிநவீன சுதேசி ATAGS MGS பிரங்கி அமைப்பு !!

  • Tamil Defense
  • October 8, 2022
  • Comments Off on அடுத்த வருடம் வெளிவரும் அதிநவீன சுதேசி ATAGS MGS பிரங்கி அமைப்பு !!

அடுத்த ஆண்டு ஏற்கனவே Defence Research & Development Organisation வடிவமைத்து Bharat Forge நிறுவனம் தயாரித்த ATAGS Advanced Towed Artillery Gun System எனப்படும் சுதேசி பிரங்கியின் MGS Mounted Gun System வெளிவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது ATAGS பிரங்கி Tatra T815 27ET96 28 300 8×8 லாரியில் பொருத்தப்படும் இதனை MArG Monted Artillery Gun எனவும் அழைப்பார்கள், லாரியில் பொருத்தப்படுவதை தான் மவுண்டட் என கூறுகிறார்கள்.

இந்த லாரியில் ஒட்டுநர் அறைக்கு கவச பாதுகாப்பு அளிக்கப்படும், எந்தவித நிலப்பரப்பிலும் தங்கு தடையின்றி பயணிக்கும் ஆற்றலை இந்த லாரி கொண்டிருக்கும் எனவும் ஏற்கனவே இந்த தரைப்படையால் பயன்படுத்தி வரப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்திய தரைப்படை இரண்டு வகையான MGS பிரங்கி அமைப்புகளை படையில் இணைக்க விரும்புகிறது ஒன்று கனரகம் இது மேற்குறிப்பிட்ட ATAGS MGS ஆகும், இது 155 மில்லிமீட்டர் அளவு துப்பாக்கி மற்றும் 52 காலிபர் திறனை கொண்டதாகும்.

இரண்டாவது Kalyani Group கல்யானி குழுமம் தயாரித்த TC-20 எனப்படும் ULH Ultra Light Howizer அதாவது மிகவும் இலகுவான பிரங்கி, இது 155 மில்லிமீட்டர் துப்பாக்கி மற்றும் 39 காலிபர் திறனை கொண்டது, இது ஒரு 4×2 லாரியில் பொருத்தப்பட்டு இருக்கும் தற்போது சோதனையில் இருக்கும் இது விரைவில் படையில் இணையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ATAGS பிரங்கியின் இழுத்து செல்லப்படும் ரகமானது தட்பவெப்ப தாக்க சோதனைகளை தவிர அனைத்து சோதனைகளையும் கடந்து விட்டது விரைவில் சுமார் 150 இத்தகைய பிரங்கிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.