Astra IR இந்தியாவின் அடுத்த தலைமுறை வானிலக்கு ஏவுகணை !!

  • Tamil Defense
  • October 17, 2022
  • Comments Off on Astra IR இந்தியாவின் அடுத்த தலைமுறை வானிலக்கு ஏவுகணை !!

ASTRA MK1 அஸ்திரா மார்க்-1 வானிலக்கு ஏவுகணை அதாவது வானிலிருந்து ஏவப்படும் வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணை திட்டத்தின் கிளை திட்டமாக உதித்தது தான் ASTRA IR அஸ்திரா ஐ.ஆர் வானிலக்கு ஏவுகணை திட்டமாகும்.

இந்த ASTRA IR Infrared அஸ்திரா அகச்சிவப்பு கதிர் ஏவுகணையானது அகச்சிவப்பு கதிர் மற்றும் ரேடியோ கதிர்கள் தேடல் கருவிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஆனால் அதே அஸ்திரா மார்க்-1 ரகத்தின் வடிவமைப்பை தான் கொண்டிருக்கும்.

அதாவது முதலில் அஸ்திரா மார்க்-1ல் உள்ள Ku அலைவரிசையில் இயங்கும் AESA தேடல் கருவியை மாற்றிவிட்டு அகச்சிவப்பு கதிர் அதாவது வெப்ப உணர் தேடல் கருவியை பொருத்துவது தான் திட்டமாக இருந்த நிலையில் பின்னர் ஒரே ஏவுகணையில் மேற்குறிப்பிட்ட கருவியுடன் ரேடார் தேடல் கருவியை பொருத்தி அடுத்த தலைமுறை ஆயுதமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதனை Rail மற்றும் Ejection போன்ற முறைகளில் ஏவ முடியும் இதனை ஐந்தாம் தலைமுறை விமானங்களில் பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் இது ஒரு இடைத்தூர Medium Range ஏவுகணையாகும் இதன் துல்லிய தாக்குதல் திறன் அதிகமாக இருக்கும் எனவும்

ASRAAM மற்றும் Python-5 போன்ற ஏவுகணைகளை விடவும் அதிகமான தாக்குதல் வரம்பை கொண்ட ஏவுகணையாக இது இருக்கும் என DRDO Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.