
இந்திய தரைப்படையின் மிகப்பெரிய போக்குவரத்து வாகனங்கள் சப்ளையரான அஷோக் லேலண்ட் நிறுவனம் அஹமதாபாத் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியில் தனது 3 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
1) JEET 4×4
மலை பிரதேச பகுதிகள், அதிக உயர பகுதிகள், கரடு முரடான நிலபரப்பு கொண்ட பகுதிகள், சமவெளி பகுதிகள், பாலைவன பகுதிகளில் சிறப்பாக இயங்க வடிவமைக்கப்பட்டு நிருபிக்கப்பட்ட வாகனம். இதனை ராணுவ பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ளலாம், சமகால தொழில்நுட்பங்கள் இந்த வாகனத்தின் அனைத்து அமைப்புகளிலும் புகுத்தப்பட்டுள்ளது.
2) LBPV 4×4
Light Bullet Proof Vehicle அதாவது இலகுரக குண்டு துளைக்கா கவச வாகனம், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம் 6 வீரர்களை சுமந்து கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு/ கிளர்ச்சி ஒழிப்பு, கண்காணிப்பு, விரைவான நகர்தல் மற்றும் ரோந்து போன்ற பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம், இதனை அனைத்து பகுதிகளிலும் பயணிக்கும் கவச பாதுகாப்பு கொண்டது மேலும் வாகனத்தின் மேலே ஒரு இயந்திர துப்பாக்கி பொருத்த முடியும். All wheel Independent Suspension, ABS, Ride Height management மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த வாகனத்தின் கவர்ச்சியான அம்சங்கள் ஆகும்.
3) T-72GB Tank Gearboxes
T-72 Ajeya அதாவது ரஷ்யாவிடம் தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் தொழில்நுட்பம் பெற்று நமது தேவைக்கு ஏற்ப இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டி-72 அஜேயா ரக டாங்கிகளுக்கான கியர்பாக்ஸ்களை மற்றும் வேறு சில பாகங்களையும் தயாரித்து காட்சிபடுத்தியுள்ளது.
ஜீத் வாகனத்தை கார்கில் போரில் பங்கு பெற்று மஹா வீர் சக்ரா எனும் உயரிய வீரதீர விருதை பெற்ற கர்னல் சோனம் வாங்சூக் அறிமுகம் செய்தார் மற்ற தயாரிப்புகளை அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவின் இணை தலைவர் ஆர். ராஜேஷ் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.