கேரளாவில் ராணுவ வீரர் மற்றும் அவரது தம்பி மீது காவல்துறை மிக கடுமையான தாக்குதல் மற்றும் சித்திரவதை !!

  • Tamil Defense
  • October 22, 2022
  • Comments Off on கேரளாவில் ராணுவ வீரர் மற்றும் அவரது தம்பி மீது காவல்துறை மிக கடுமையான தாக்குதல் மற்றும் சித்திரவதை !!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கிளிக்கோலூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு இவர் ராணுவ வீரர் ஆவார், இவரது தம்பி விக்னேஷ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான DYFIயின் உறுப்பினர் ஆவார், இவர்கள் இருவரையும் கிளிக்கோலூர் காவல்நிலைய காவல்துறையினர் மிகவும் மோசமாக தாக்கி உள்ளனர்.

அதாவது விக்னேஷை காவலர் மணிகண்டன் காவல்நிலையத்திற்கு வந்து ஒருவருக்கு ஜாமீன் கையெழுத்திடுமாறு வர வேண்டும் என கூறியுள்ளார் ஆனால் வழக்கின் விவரங்கள் எதையும் அவர் கூறவில்லை காவல்நிலையம் சென்ற போது தான் குற்றவாளி MDMA எனப்படும் ஆபத்தான போதை மருந்து கடத்தல் காரன் என்பது தெரிய வந்துள்ளது.

அப்போது விக்னேஷ் ஜாமீன் கையெழுத்திட மறுத்துள்ளார் அந்த நேரத்தில் அவரது அண்ணன் விஷ்ணு காவல் நிலையம் வந்து தம்பியை அழைத்து செல்ல வந்த சற்று நேரத்தில் உதவி இணை ஆய்வாளர் பிரகாஷ் சந்திரன் அங்கு குடிபோதையில் வந்துள்ளார், அப்போது வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து விஷ்ணு தான் ராணுவ வீரர் என கூறியதும் பிரகாஷ் சந்திரன் அவரை தாக்கி உள்ளார் மேலும் வரும் வழியில் விஷ்ணு காவல் நிலையம் நோக்கி வேகமாக வந்ததால் ஒரு ஆட்டோவில் கிட்டத்தட்ட மோத சென்றுள்ளார் அப்போதே பிரகாஷ் சந்திரனுடன் பிரச்சினை துவங்கி உள்ளது.

காவல்நிலையத்தில் சகோதரர்கள் இருவரும் பிரகாஷ் சந்திரனுக்கு குடிபோதை சோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்திய போது விஷ்ணுவின் லுங்கியை உருவி அவரை கேமரா இல்லாத அறைக்கு அழைத்து சென்று மூன்று காவலர்கள் தாக்கி உள்ளனர்.

விக்னேஷையும் விஷ்ணு முன்பு வைத்தே தாக்கியுள்ளனர் தான் காவல்துறைக்கு தேர்வாகி உள்ளதாக அவர் கூறிய போது காவலர்கள் அவரது துப்பாக்கி சுடும் விரலை உடைத்துவிட்டு இனி எப்படி காவல்துறையில் சேருவாய் என கேட்டுள்ளனர் பின்னர் இருவரையும் 12 நாள் காவலில் வைத்து விடுவித்துள்ளனர்.

மட்டுமின்றி அவர்கள் போதை பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் என கேரள காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது இந்த பொய்யான அறிக்கையால் காதலித்து திருமணம் நிச்சியிக்கப்பட்டு திருமணத்திற்காக ஊருக்கு வந்திருந்த ராணுவ வீரர் விஷ்ணுவின் திருமணம் தடைபட்டது.

விக்னேஷின் கை விரல்களில் முறிவு ஏற்பட்டுள்ளது கால் எலும்புகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது,இந்த சம்பவம் வெளியானதை தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கொல்லம் காவல் ஆணையர் மெரின் ஜோசஃப் அறிக்கை வெளியிட்டுள்ளார்.