இந்திய ஃபிரான்ஸ் கூட்டு தயாரிப்பில் உருவான புதிய ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கி !!

  • Tamil Defense
  • October 3, 2022
  • Comments Off on இந்திய ஃபிரான்ஸ் கூட்டு தயாரிப்பில் உருவான புதிய ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கி !!

ஒரு காலத்தில் பாதுகாப்பு பெட்டக தயாரிப்பில் உலக புகழ்பெற்ற கோத்ரேஜ் நிறுவனம் தற்போது பாதுகாப்பு தளவாட தயாரிப்பிலும் கால்பதித்துள்ளது.

அந்த வகையில் ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த CERBAIR நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து CHIMERA கிமெரா எனப்படும் புதிய அதிநவீன ஆளில்லா விமான எதிர்ப்பு துப்பாக்கியை உருவாக்கி உள்ளது.

இதில் இரண்டு வடிவங்கள் உள்ளன MANPAD – Man Portable Air Defence அதாவது வீரர்கள் சுமந்து சென்று தாக்கும் வகை மற்றொன்று Static அதாவது நிலையானது ஒரு இடத்தில் எப்போதும் நிலையாக இருக்கும் வகையிலானது.

MANPAD வடிவத்திலான இந்த ஆளில்லா விமான எதிர்ப்பு துப்பாக்கியானது ஒரு வீரர் தனது தோளில் வைத்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள்ளாக வரும் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.

வீரர் தனது முதுகில் சுமக்கும் பையில் ஒரு பிரத்தியேக ஆண்டென்னா உள்ளது, இந்த ஆண்டென்னாவை கொண்டு இதன் காரணமாக ஆளில்லா விமானத்தின் ரேடியோ அலைவரிசையை முடக்கி அதனை வீழ்த்தி விடும்.

CHIMERA MANPAD வடிவமானது ஒவ்வொரு அமைப்பும் தலா 3 முதல் 4 கோடி ரூபாய் மதிப்பிலானவை எனவும், Static வடிவமானது 4 முதல் 5 கிலோமீட்டர் வரை தாக்குதல் வரம்பை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.