சமீபத்தில் ரஷ்யா உக்ரைனில் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை தன்னுடன் இணைத்து கொண்ட நிலையில் தற்போது அந்த பகுதிகளும் ரஷ்யாவின் மற்ற பகுதிகளை போலவே அணு ஆயுத பாதுகாப்பின் கீழ் வரும் என ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளின் அறிக்கை வெளியிட்டது.
இந்த நான்கு பகுதிகளும் ரஷ்யாவின் பிரிக்கமுடியாத அங்கங்களாகும் அவற்றிற்கு ரஷ்யாவின் மற்ற பகுதிகளுக்கு என பாதுகாப்பு வழங்கப்படுகிறதோ அதே அளவிலான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் க்ரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவரிடம் ரஷ்யா அணு ஆயுத போர் ஒத்திகையில் ஈடுபடுமா என கேட்ட போது அத்தகைய பயிற்சிகளை நடத்த சில விதிமுறைகள் உள்ளன அதன்படி நடக்கும் போது முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்
இதற்கிடையே ரஷ்ய அதிபர் ரஷ்யாவுடன் சேர்க்கப்பட்ட பகுதிகளை திரும்ப கொடுக்கும் எண்ணம் இல்லை எனவும் தங்களது எல்லைகள் அத்துமீறப்பட்டால் எந்த அளவுக்கும் சென்று தற்காத்து கொள்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.