அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் தந்திரமாக தைவானை சீனா முடக்கலாம் அமெரிக்க அதிகாரி !!

ஒரு பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் சீனா மிகவும் தந்திரமாக திட்டமிட்டு அமெரிக்காவுக்கு கூட சவால் விடுக்கும் வகையில் தைவானை முற்றுகையிட்டு முடக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

அதாவது சமீபத்தில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோஸி தைவானுக்கு சுற்றுபயணமாக சென்றதை அடுத்து கடுப்படைந்த சீனா தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சிகளை நடத்தியது.

அந்த வகையில் நேரடியாக கடற்படையை தைவானை சுற்றி குவித்து கடல்சார் முற்றுகையிட்டு தைவானை முடக்குவதற்கு பதிலாக மேற்குறிப்பிட்ட வகையில் மறைமுகமாக முற்றுகையிடலாம்

தைவானை சுற்றி வளைத்து இப்படி கடற்படை போர் ஒத்திகைகளையும், மறுபுறம் ஏவுகணை மற்றும் ராக்கெட்டுகளை ஏவியும் போர் பயிற்சிகளை மேற்கொண்டால் அது சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாகும்

ஆகவே சீனாவின் இத்தகைய தந்திரத்தால் தைவான் கையறு நிலையில் தவித்தாலும் அமெரிக்காவோ அல்லது கூட்டணி நாடுகளோ இதனை தடுக்க பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஒரு தைவானிய அதிகாரி சீனாவின் நடவடிக்கை பற்றி பேசுகையில் ஒரு நாளும் தைவான் சீனாவின் அழுத்தத்திற்கு அடி பணியாது எனவும், இத்தகைய செயல்பாடுகள் சர்வதேச ஆதரவை பெற, எங்களது ஜனநாயகத்தை காப்பதற்கான மனவலிமையை அதிகரிக்க செய்யும் என்றார்.