
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இந்திய விமானப்படையின் ஜம்மு விமானப்படை தளத்தில் இருந்து முதல்முறையாக போர் விமானங்களை இந்திய விமானப்படை இயக்க துவங்கி உள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை என இதை நிபுணர்கள் பார்க்கும் நிலையில் முதலாவது சுகோய்-30 Su-30 MKI போர் விமானம் இங்கிருந்து இயங்கி உள்ளது.
பாலகோட் தாக்குதலின் போது போர் விமானங்கள் ஹரியானா மாநிலம் அம்பாலா மற்றும் காஷ்மீர் மாநிலம் அவந்திபோரா விமானப்படை தளங்களில் இருந்து புறப்பட்டு சென்று தான் இதனால் அதிக நேரம் ஆனது.
இனி எதிர்காலத்தில் இத்தகைய காலவிரயம் தவிர்க்கப்படும் ஆகவே இந்திய விமானப்படை மேலும் விரைவாக இத்தகைய மிகவும் முக்கியமான நடவடிக்கைகளை கூடுதல் சிக்கலின்றி மேற்கொள்ள முடியும் என்பது சிறப்பாகும்.