அக்னி-1பி அணு ஆயுத ஏவுகணை வெற்றிகரமாக சோதனை !!

  • Tamil Defense
  • October 21, 2022
  • Comments Off on அக்னி-1பி அணு ஆயுத ஏவுகணை வெற்றிகரமாக சோதனை !!

நேற்று காலை இந்தியா ஒடிசா மாநிலத்தில் இருந்து வெற்றிகரமாக அக்னி-1பி Agni-1P ரக அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்துள்ளது, இதில் துல்லியமாக இலக்கை தாக்கி தனது நம்பகத்தன்மையை நிருபித்துள்ளது.

மூன்றாவது முறையாக சோதனை செய்யப்பட்ட இந்த ஏவுகணையானது MIRV – Multiple Independent Re-entry Vehicle தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது, ஆகவே இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை சுமக்க முடியும்.

மேலும் இதில் உள்ள அதிநவீன வழிகாட்டி அமைப்புகள் மற்றும் அதனுடைய திறன்கள் காரணமாக நகரும் கப்பல் படையணிகளை ஒட்டுமொத்தமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது ஆகவே இவற்றை கப்பல் எதிர்ப்பு பணியிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.