இந்திய ட்ரோன்கள் மற்றும் மிதவை குண்டுகள் மீது ஆர்வம் காட்டும் ஆஃப்ரிக்க நாடுகள் சீனாவுக்கு போட்டி !!

  • Tamil Defense
  • October 8, 2022
  • Comments Off on இந்திய ட்ரோன்கள் மற்றும் மிதவை குண்டுகள் மீது ஆர்வம் காட்டும் ஆஃப்ரிக்க நாடுகள் சீனாவுக்கு போட்டி !!

தற்போது உக்ரைனிலும் அர்மீனியாவிலும் நடைபெற்று வரும் போர்கள் மிதவை குண்டுகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் தேவையை நன்கு உணர்த்தியுள்ளன, இதனால் ஆஃப்ரிக்க நாடுகள் இவற்றை பெற விரும்புகின்றன.

ஆனால் ஐரோப்பிய மற்றும் பிற மேற்கு நாடுகளின் தயாரிப்புகள் அதிக விலை கொண்டவையாக உள்ளன அதே நேரத்தில் மலிவான சீன தயாரிப்புகள் மிகவும் தரம் குறைந்தவையாக உள்ளன, இவற்றிற்கு பதிலாக இந்திய தயாரிப்புகள் உள்ளன.

அதாவது மேற்கு நாடுகளின் தயாரிப்புகளை விடவும் 40% மலிவானதாகவும் தரமானதாகவும் உள்ளன ஆகவே பல ஆஃப்ரிக்க நாடுகள் இந்திய தயாரிப்பு ஆளில்லா விமானங்கள் மற்றும் மிதவை குண்டுகள் பற்றிய தகவலை அந்தந்த நிறுவனங்களிடம் பெற்று வருகின்றன.

மேலும் இந்திய ஆளில்லா விமான தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே சீன நிறுவனங்கள் கோலோச்சி வந்த ஆஃப்ரிக்க சந்தையில் நுழைந்து முதல்கட்டமாக விவசாயம் மற்றும் புவியியல் தொடர்பான ட்ரோன்கள் வாங்க ஒப்பந்தம் பெற்றுள்ளது சிறப்பான தகவலாகும்.