நமது DRDO Defence Research & Development Organisation எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ஆறு A321 ரக விமானங்களை AWACS கண்காணிப்பு விமானங்களாக மாற்றியமைத்து வருகிறது.
அந்த வகையில் முதலாவது NETRA AWACS நேத்ரா முன்னெச்சரிக்கை கண்காணிப்பு விமானமானது 2025ஆம் ஆண்டு இந்திய விமானப்படைக்கு டெலிவரி செய்யப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விமானங்களில் ஒரு ஃபிரெஞ்சு நிறுவனம் வழக்கமான இருக்கைகளை மாற்றிவிட்டு ராணுவ தேவைக்கேற்ப இருக்கைகளை மாற்றியமைக்கும் எனவும் சிவிலியன் ஏவியானிக்ஸ் அமைப்பை மாற்றிவிட்டு ராணுவ தேவைக்கேற்ப இருக்கைகளையும் ஏவியானிக்ஸ் அமைக்க உள்ளனர்.
மேலும் ஒட்டுமொத்த வயர்களை மாற்றி, ஒலி புகாத அறைகள், கூடுதலான மின்சக்தி அமைப்புகள், இரண்டு பக்கமும் AESA ரேடார் அமைப்புகள், தகவல் தொடர்பு கருவிகள், கடல்சார் ரேடார், ஆபரேஷன் கட்டுபாட்டு அமைப்பு, மின்னனு போரியல் அமைப்பு மற்றும் உதவி அமைப்புகள் ஆகியவை பொருத்தப்படும்.
இவை ஏற்கனவே நாம் சொந்தமாகி உருவாக்கி பயன்படுத்தி வரும் NETRA ரேடார் அமைப்புகள் தான் இதிலும் பயன்படுத்தப்படும் மேலும் 500 – 400 கிலோமீட்டர் வரை கண்காணிக்கும் திறன் இருக்கும் கடைசி விமானம் 2027ஆம் ஆண்டு டெலிவரி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.