சீனா, பாகிஸ்தான் உடனான எல்லைகளில் சுமார் 75 புதிய கட்டுமான திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு !!

  • Tamil Defense
  • October 29, 2022
  • Comments Off on சீனா, பாகிஸ்தான் உடனான எல்லைகளில் சுமார் 75 புதிய கட்டுமான திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு !!

நேற்று அதாவது அக்டோபர் 28ஆம் தேதியன்று கிழக்கு லடாக்கில் உள்ள டூர்புக்-ஷியோக்- தவ்லத் பெக் ஒல்டி சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த விழாவில் அவர் சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான இந்திய எல்லையோர பகுதிகளில் நிறைவு செய்யப்பட்ட சுமார் 75 கட்டுமான திட்டங்களை நாட்டுக்கு அர்பணித்தார்.

இந்த 75 திட்டங்களும் 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என காஷ்மீரில் இருபதும், உத்தராகண்டில் ஐந்தும், சிக்கீம், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தானில் பதினான்கும், அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் பதினெட்டும் உள்ளன.

இவற்றில் 45 பாலங்கள், 27 சாலைகள், 2 ஹெலிகாப்டர் தளங்கள் மற்றும் 1 கார்பன் இல்லா வசிப்பிடம் ஆகியவை அடக்கம், இந்த திட்டங்கள் எல்லையோர பகுதிகளில் விரைவான நடமாட்டத்திற்கு இட்டுச்செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் லடாக்கில் உள்ள ஹான்லே மற்றும் தாகூங் ஹெலிகாப்டர் தளங்கள் மற்றும் 120 மீட்டர் நீளம் கொண்ட ஷியோக் சேது பாலம் ஆகியவை தான் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும், அதே போல் 75 திட்டங்களும் சுமார் 2180 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.