ஒரே நாளில் உக்ரைனுடைய 30% மின் உள்ளகட்டமைப்பு நாசம் ; ரஷ்ய தாக்குதலால் பலத்த மின்வெட்டு !!
1 min read

ஒரே நாளில் உக்ரைனுடைய 30% மின் உள்ளகட்டமைப்பு நாசம் ; ரஷ்ய தாக்குதலால் பலத்த மின்வெட்டு !!

சமீபத்தில் ரஷ்யா மற்றும் க்ரைமியாவை இணைக்கும் கெர்ச் ஜலசந்தி பாலம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி அதனை தகர்த்தது இதனை தொடர்ந்து ரஷ்யா நிச்சயமாக பதிலடி கொடுப்போம் என அறிவித்தது.

இதனையொட்டி சமீபத்தில் ஒரே நாளில் சுமார் 83 ஏவுகணைகளை ஏவி உக்ரைனில் பல்வேறு இடங்களில் சரமாரியாக தாக்குதல் நடத்தியது பல இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் உக்ரைன் நாட்டின் 30 சதவிகித அளவிலான மின்சார உள்கட்டமைப்பு தகர்க்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் அதிபர் கூறி சிவிலியன் உள்கட்டமைப்பை தகர்ப்பது போர் குற்றம் என அறிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை அடுத்து உக்ரைன் முழுவதும் பலத்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது, குறிப்பாக தலைநகர் கியீவ் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.