Day: October 25, 2022

ஒரு காலத்தில் ஐ.எஸ்.ஐ அமைப்பின் சொர்க்கபுரியாக திகழ்ந்த நேபாளம் இன்று அவர்களுக்கு நரகம் !!

October 25, 2022

கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டூவில் லால் முஹம்மது எனும் பாகிஸ்தானியரும் இந்தியாவில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் கும்பல் மற்றும் தாவூத் இப்ராஹீம் கும்பலுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவனை மர்ம் நபர்கள் பொது இடத்தில் சுட்டு கொன்றனர். 58 வயதான லால் முஹம்மது கொலை குற்றம் ஒன்றில் குற்றவாளியாக தீர்க்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த போது 2017ஆம் ஆண்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு வெளியே வந்து துணி வியாபாரம் தொடங்கினான் […]

Read More

அடுத்த ஆண்டு படையில் இணையும் இரண்டாவது சுதேசி அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் !!

October 25, 2022

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மிகவும் தீவிரமான கடல் சோதனைகளில் ஈடுபட்டுள்ள ஐ.என்.எஸ். அரிகாட் INS ARIGHAT அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது இந்தியாவின் இரண்டாவது சுதேசி அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் என்பதும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது என்பதும் இதன் சிறப்பம்சம் ஆகும். இந்தியாவின் முதலாவது சுதேசி அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலான INS ARIHANT ஐ.என்.எஸ். […]

Read More

அமெரிக்க மற்றும் ரஷ்யா இடையே உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை !!

October 25, 2022

மிகவும் அரிதான நிகழ்வாக மே மாதத்திற்கு பிறகு ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஜெ ஆஸ்டின் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஜெ ஆஸ்டின் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்குவிடம் போர் நடைபெற்று வந்தாலும் தொடர்புகளை துண்டிக்காமல் வைத்திருப்பது அவசியம் என வலியுறுத்தி உள்ளார். இந்த பேச்சுவார்த்தைக்கு […]

Read More

அணையை உடைத்து தெற்கு உக்ரைனை மூழ்கடிக்க ரஷ்யா திட்டம் உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு !!

October 25, 2022

தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சோன் பகுதியில் அமைந்துள்ள அணை ஒன்றை ரஷ்யா தகர்க்க திட்டமிட்டு உள்ளதாகவும் மேற்குலக நாடுகள் அதனை அனுமதிக்க கூடாது எனவும் உக்ரைன் அதிபர் வோலோடிமீர் செலன்ஸ்கி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அணு ஆயுத தாக்குதல் மிரட்டல் பலனளிக்காத காரணத்தால் தற்போது ரஷ்யா இந்த அணையை உடைத்து தெற்கு உக்ரைனுடைய பெரும்பகுதியை முழ்கடிக்கவும், இங்கு மின்சாரம் உற்பத்தி நடைபெறுவதால் அதனையும் நிறுத்தி குளிர்காலத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தவும் ரஷ்யா திட்டமிட்டு உள்ளதாகவும் […]

Read More

ஃபிரான்ஸ் போர் விமானிகளை பணிக்கு அமர்த்தும் சீன விமானப்படை !!

October 25, 2022

ஒய்வு பெற்ற ஃபிரான்ஸ் விமானப்படையின் போர் விமானிகளை சீன மக்கள் விடுதலை ராணுவ விமானப்படை தனது போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க பணிக்கு அமர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும் குறிப்பாக ஃபிரான்ஸ் கடற்படையின் போர் விமானிகளுக்கு சீன கடற்படை அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் நல்ல சம்பளம் கொடுத்து ஈர்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 40களில் உள்ள முன்னாள் ஃபிரெஞ்சு கடற்படை போர் விமானி ஒருவருக்கு மாதம் ஒன்றிற்கு தலா 20,000 யூரோக்கள் அதாவது இந்திய […]

Read More

இந்த வருடம் தைவான் சீனா போர் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை !!

October 25, 2022

சமீபத்தில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் அட்லாண்டிக் கவுன்சில் நடத்திய கருத்தரங்கில் அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைகள் பிரிவின் தலைவர் அட்மிரல் மைக்கேல் கில்டே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்த ஆண்டு சீனா தைவான் மீது படையெடுக்கும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் எனவும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தைவானை சீனாவுடன் இணைப்பதில் மிகவும் தீவிரமாக இருப்பதாகவும் கூறினார். மேலும் அவர் அமெரிக்க படைகள் இத்தகைய சூழல் ஏற்பட்டால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ள தயாராக இருக்க […]

Read More

தேஜாஸ் மார்க்-2 போர் விமானத்தின் மீது 16 நாடுகள் ஆர்வம் தயாரிப்பை அதிகபடுத்த முடிவு !!

October 25, 2022

நடுத்தர தேஜாஸ் மார்க்-2 Tejas Mk2 போர் விமானத்தின் மீது சுமார் 16 நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் ஆகவே தேஜாஸ் விமானத்தின் தயாரிப்பு திறனை அதிகபடுத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் ஒரு மூத்த பாதுகாப்பு துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் பாதுகாப்புக்கான கேபினட் கவுன்சில் இந்த 4.5 ஆம் தலைமுறை போர் விமானத்திற்கான பணிகளை துவங்க அனுமதி அளித்தது, இந்திய விமானப்படையின் ஜாகுவார் SEPECAT JAGUAR, மிக்-29 MIG-29 மற்றும் டஸ்ஸால்ட் […]

Read More

இரண்டாவது முறையாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் !!

October 25, 2022

கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஜெ ஆஸ்டின் உடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஜெ ஆஸ்டின் உடன் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் நிலைமை மோசமாகி வருவதாக தெரிவித்துள்ளார், அதே நேரத்தில் இருதரப்பும் புரிதலின்மையை தடுக்க தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்பு கொண்டதாகவும் […]

Read More

அடுத்து ஆண்டு சந்திரயான்-3 ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் !!

October 25, 2022

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சந்திரயான்-3 ஏவப்படும் எனவும் இந்த முறை மிகவும் திறன் வாய்ந்த Rover அதாவது ஒரு வாகனமும் உடன் அனுப்பி வைக்கப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார். இந்த திட்டத்திற்கு GSLV MK3 ராக்கெட் பயன்படுத்தப்படும் எனவும், தற்போது சந்திரயான் – 2 மூலமாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டு சுற்றி வரும் செயற்கைகோள் இதற்கு உதவியாக இருக்கும். மேலும் இதில் அனுப்பி வைக்கப்படும் ரோவர் வாகனம் சந்திரயான் 2 […]

Read More

கோவை குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதல் திட்டமா ??

October 25, 2022

நேற்று மாலை கோயம்புத்தூர் நகரில் ஒரு கோவில் அருகே எரிவாயு மூலமாக இயங்கும் கார் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானது இதில் காரை ஓட்டி வந்தவர் பலியானார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர் அதாவது சம்பவ இடத்தில் இருந்து 2 கிலோ அளவிலான இரும்பு ஆணிகள் மற்றும் 2 கிலோ அளவிலான இரும்பு குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது மாநில காவல்துறையையே பரபரப்பாக்கிய நிலையில் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு உடனடியாக கோவை விரைந்தார் […]

Read More