Day: October 19, 2022

இந்த ஆண்டு இறுதிக்கு முன்னர் துவங்கும் ஏகே203 துப்பாக்கி தயாரிப்பு பணிகள் !!

October 19, 2022

ரஷ்யாவின் ரோஸ்போரான்எக்ஸ்போர்ட் RosboronExport நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸாண்டர் மிகீவ் இந்த ஆண்டு இறுதிக்கு முன்பாக இந்தியாவிலேயே ஏகே203 ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் பணிகள் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். குஜராத்தின் அஹமதாபாத் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியில் ரோஸ்போரான்எக்ஸ்போர்ட் நிறுவனம் கலந்து கொண்டுள்ளது ஆகவே அதில் கலந்து கொள்ள வருகை தந்த அலெக்சாண்டர் மிகீவ் செய்தியாளர்களிடம் இந்த தகவல்களை தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது உத்தர பிரதேச மாநிலத்தின் அமெதி மாவட்டத்தில் உள்ள கோர்வா நகரத்தில் அமைந்துள்ள […]

Read More

மிக்29 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்திய விமானப்படை !!

October 19, 2022

இந்திய விமானப்படை தனது மிக்-29 Mig-29 ரக போர் விமானங்களின் ஆயுட்காலத்தை இரண்டாவது முறையாக சுமார் 40 முதல் 50 ஆண்டுகள் வரை அதிகரிக்கும் வகையில் அவற்றை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது. கடந்த 1986ஆம் ஆண்டு படையில் இணைக்கப்பட்ட இந்த போர் விமானங்கள் முதல் முறையாக கடந்த 2000ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டு அவற்றின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டது, இதன்பிறகு காங்கிரஸ் ஆட்சியில் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஏ கே ஆண்டனி 25 முதல் 40 ஆண்டுகளுக்கு அதிகரிக்கப்பட்டு உள்ளதாக […]

Read More

சீன விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் முன்னாள் பிரிட்டன் போர் விமானிகள் !!

October 19, 2022

சீன விமானப்படை டஜன் கணக்கான முன்னாள் பிரிட்டன் போர் விமானிகளை தனது போர் விமானிகளை பயிற்றுவிப்பதற்காக பணிக்கு அமர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிலும் பிரிட்டிஷ் விமானப்படையின் டைஃபூன், டொர்னேடோ, ஹாரியர் மற்றும் ஜாகுவார் (Eurofighter Typhoon, Harrier, Jaguar , Panavia Tornado) போன்ற போர் விமானங்களை இயக்கிய போர் விமானிகளை வருடத்திற்கு 270000 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 22 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளது. […]

Read More

இஸ்ரேலை தாக்க உருவாக்கப்பட்ட ஈரானிய ட்ரோன்களை உக்ரைனில் களமிறக்க ரஷ்யா திட்டம் !!

October 19, 2022

ரஷ்யா தற்போது உக்ரைன் மீதான படையெடுப்பில் Shahed-136 அல்லது Mojaher-6 என ஷாஹெத்-136 அழைக்கப்படும் ஈரானிய தயாரிப்பு தற்கொலை தாக்குதல் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது அவற்றை விட மிகவும் சக்திவாய்ந்த Arash-2 அராஷ்-2 ஆளில்லா தற்கொலை தாக்குதல் விமானங்களை ரஷ்யா ஈரானிடம் இருந்து வாங்கி உக்ரைனில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ட்ரோன்களை பற்றி ஈரானிய ராணுவ அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் கிமோர்ஸ் ஹைதாரி கூறுகையில் இவை இஸ்ரேலிய நகரங்களை […]

Read More

ரஷ்யா பெலாரஸ் இணைந்து உருவாக்கிய பிராந்திய ராணுவ படைப்பிரிவு !!

October 19, 2022

பெலாரஸ் மற்றும் ரஷ்யா கூட்டாக இணைந்து ஒரு பிராந்திய ராணுவ கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி உள்ளனர், இந்த கூட்டமைப்பின் மூலமாக ஒரு கூட்டு ராணுவ படைப்பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டு ராணுவ படைப்பிரிவில் சுமார் 70,000 பெலாரஸ் வீரர்களும் 15,000 ரஷ்ய வீரர்களும் இருப்பர் எனவும் விரைவில் ரஷ்ய வீரர்கள் பெலாரஸ் வர உள்ளதாகவும் பெலாரஸ் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். போலந்து லித்துவேனியா லாத்வீயா போன்ற நாடுகள் பெலாரஸ் நாட்டை சேர்ந்த கிளர்ச்சியாளர்களை பயிற்றுவித்து […]

Read More

விரைவில் வெளிவரும் இந்தியாவின் புதிய சக்திவாய்ந்த அணு ஆயுத ஏவுகணை ஒரு பார்வை !!

October 19, 2022

இந்தியா விரைவில் தனது புதிய நீர்மூழ்கியில் இருந்து ஏவப்படும் அணு ஆயுத ஏவுகணையை உருவாக்க உள்ளது தற்போது அதனுடைய சில சிறப்பம்சங்கள் தற்போது வெளியாகி உள்ளது அவற்றை பார்க்கலாம். இது IC SLBM Intercontinental Submarine Launched Ballistic Missiles அதாவது நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பலிஸ்டிக் ஏவுகணை ரகத்தை சேர்ந்ததாகும், இதன் தாக்குதல் வரம்பு சுமார் 6000 முதல் 8000 கிலோமீட்டர் ஆகும். மூன்று நிலை கொண்ட இந்த […]

Read More

தென்கொரியாவிடம் இருந்து 300 பலகுழல் ராக்கெட்டு அமைப்புகள் மற்றும் 23000 ராக்கெட்டுகள் வாங்கும் போலந்து !!

October 19, 2022

போலந்து தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் தென்கொரியாவிடம் இருந்து சுமார் 300 K239 Chunmoo சுன்மோ ரக பலகுழல் ராக்கெட் ஏவும் அமைப்புகளையும் அவற்றிற்கான 23,000 ராக்கெட்டுகளையும் வாங்க உள்ளது. அடுத்த வாரம் போலந்து நாட்டின் துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான மரியூஸ் பிளாக்ஸாக் தென்கொரிய தலைநகர் சியோல் நகருக்கு பயணம் மேற்கொள்ளும் போது இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதனை பற்றி மரீயூஸ் பிளாக்ஸாக் பேசும்போது இது ஒரு அற்புதமான ஆர்டில்லரி ஆயுதம் உக்ரைனில் ஆர்டில்லரி […]

Read More