நடுத்தர தேஜாஸ் மார்க்-2 Tejas Mk2 போர் விமானத்தின் மீது சுமார் 16 நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் ஆகவே தேஜாஸ் விமானத்தின் தயாரிப்பு திறனை அதிகபடுத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் ஒரு மூத்த பாதுகாப்பு துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் பாதுகாப்புக்கான கேபினட் கவுன்சில் இந்த 4.5 ஆம் தலைமுறை போர் விமானத்திற்கான பணிகளை துவங்க அனுமதி அளித்தது, இந்திய விமானப்படையின் ஜாகுவார் SEPECAT JAGUAR, மிக்-29 MIG-29 மற்றும் டஸ்ஸால்ட் மிராஜ்-2000 Dassault Mirage-2000 ஆகிய விமானங்களுக்கு மாற்றாக இது அமையும்.
அமெரிக்க தயாரிப்பு GE F414 ரக என்ஜின்கள் இந்த விமானத்தில் பயன்படுத்தப்படும் இதற்கான தொழில்நுட்ப பரிமாற்றம் விரைவில் நடக்கும் அதையொட்டி அந்த என்ஜினும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் இதுவுமீ இந்த விமானத்தின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்றாகும்.
இதனால் தற்போது வடிவமைப்பு நிலையில் இந்த விமானத்தின் மீது சுமார் 16 நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன ஆகவே அவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையிலும் ஏற்றுமதி வாய்ப்புகளை இப்போதே அதிகரிக்கும் வகையிலும் தயாரிப்பு திறனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.