Day: October 15, 2022

பாகிஸ்தானிய கடலோர காவல்படையிடம் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு; இந்திய கடலோர காவல் அதிரடி !!

October 15, 2022

இந்திய மீனவர்களை பாகிஸ்தானிய கடலோர காவல்படை சிறைபிடித்து சென்ற நிலையில் அவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்ட செய்தி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த அக்டோபர் 6ஆம் தேதி குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீன்பிடி படகான ஹர்சித்தி-5 ஜகாவ் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது உதவி கேட்டு கோரிக்கை விடுத்ததை சற்று தொலைவில் இருந்த இந்திய கடலோர காவல்படை கலன் ICGS ARINJAY அரின்ஜய் பெற்று கொண்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அரின்ஜய் […]

Read More

தனது படையணியுடன் இணைந்து செயலாற்றும் பயிற்சிகளில் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல் !!

October 15, 2022

INS VIKRANT விக்ராந்த் விமானந்தாங்கி போர் கப்பல் தற்போது தனது படையணியுடன் இணைந்து செயலாற்றுவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு உள்ளது, இதனை மேற்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் அஜேந்திர பஹதூர் சிங் மேற்பார்வை செய்தார். விமானந்தாங்கி கப்பல்கள் தன்னந்தனியாக இயங்குவது இல்லை மாறாக நாசகாரி கப்பல்கள், ஃப்ரிகேட், கார்வெட், டேங்கர், நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவை அடங்கிய குழுவுடன் அதற்கு தலைவராக இயங்கும் இந்த குழுவை CBG Carrier Battle Group அதாவது விமானந்தாங்கி போர் படையணி […]

Read More

பாதுகாப்பு கண்காட்சியில் 430 ராணுவ தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் ஆயுதங்களை அறிமுகப்படுத்தும் DRDO !!

October 15, 2022

வருகிற 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரத்தில் இந்த ஆண்டிற்கான பாதுகாப்பு கண்காட்சி Defexpo-2022 நடைபெற உள்ளது, அதில் DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சுமார் 430 வெவ்வேறு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட 430 வெவ்வேறு விதமான கடற்படை, வான்படை, தரைப்படை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு சார்ந்த ஆயுதங்கள் […]

Read More

பிரங்கிகளை சுட்டும் போர் விமானங்களை எல்லைக்கு அருகே பறக்க விட்டும் வடகொரியா அட்டகாசம் !!

October 15, 2022

வடகொரியா தென் கொரியா உடனான எல்லையோரம் அருகே நூற்றுக்கணக்கான பிரங்கி குண்டுகளை சுட்டும் குறுந்தூர ஏவுகணை ஒன்றை கடலை நோக்கி ஏவியும் உள்ளது. இது போதாதென்று 10 போர் விமானங்களை தென்கொரிய எல்லைக்கு மிக மிக அருகே பறக்கவிட்டுள்ளது இதனை தொடர்ந்து தென்கொரிய விமானப்படையும் போர் விமானங்களை பறக்க விட்டுள்ளது. சமீபத்தில் வடகொரியா நடத்திய தொடர் ஏவுகணை சோதனைகள் காரணமாக தென்கொரியா 15 வடகொரிய அதிகாரிகள் மற்றும் 16 வடகொரிய அமைப்புகள் மீது தடைகளை விதித்து உத்தரவு […]

Read More

எலான் மஸ்கை வம்புக்கு இழுத்த உக்ரைன் அமைச்சர் இலவச இணைய சேவையை நிறுத்திய மஸ்க் !!

October 15, 2022

சமீபத்தில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்தி சில வழிமுறைகள் முன்வைத்தார் அதாவது 2014ஆம் ஆண்டில் ரஷ்யா கைபற்றிய உக்ரைனிய பகுதிகளை ரஷ்யாவிடமே கொடுத்து விடுவது இரண்டாவது நேட்டோ அமைப்பில் இணைவதற்கு முயல்வதோ அல்லது அதற்கு ஆதரவான நிலைபாட்டை எடுக்கவோ கூடாது என்பதாகும். இதை தொடர்ந்து ஜெர்மனிக்கான உக்ரைன தூதர் ஆண்ட்ரிஜ் மெல்னிக் எலான் மஸ்கிற்கு ட்விட்டரில் மிகவும் மோசமான வார்த்தையை பிரயோகித்து வசைபாடி வம்புக்கு இழுத்தார் இதற்கு பதிலடியாக எலான் மஸ்க் […]

Read More

உக்ரைன் போருக்கு இடையே சிரியாவில் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறி கொண்ட ரஷ்ய மற்றும் அமெரிக்க படைகள் !!

October 15, 2022

உக்ரைன் போர் கடந்த ஃபெப்ரவரி மாதம் துவங்கியதில் இருந்து ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவுக்கும் இடையேயான உறவுகள் அதல பாதாளத்தை நோக்கி சென்றுள்ளதை அனைவரும் அறிவோம். இந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக இருதரப்பு உறவுகளும் மோசமடைந்த சூழலிலும் கூட ரஷ்ய மற்றும் அமெரிக்க படைகளின் ரோந்து குழுவினர் சிரியாவில் சந்தித்து பேசி மகிழ்ச்சியை பரிமாறி கொண்டுள்ளனர். அதாவது அக்டோபர் 8ஆம் தேதி சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹசாகா மாகாணத்தில் துருக்கி எல்லை அருகேயுள்ள அல் […]

Read More

ரஷ்யாவுடன் இணைந்து உக்ரைன் போரில் கலந்து கொள்ள திட்டம் !!

October 15, 2022

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகஷென்கோ உக்ரைன் உடனான எல்லையோரம் ரஷ்ய படைகளுடன் இணைந்து தனது படைகளையும் குவிக்க ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த வாரத்தில் பெலாரஸ் முழுவதும் இருந்து பல்வேறு ராணுவ படையணிகள் உக்ரைன் எல்லையை நோக்கி நகர்ந்த நிலையில் ரஷ்யாவுடன் இணைந்து பெலாரஸ் படைகளும் உக்ரைன் போரில் கலந்து கொள்ளுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. அதே போல பெலாரஸ் வெளியுறவு துறை அமைச்சர் விளாடிமீர் மகேய் பெலாரஸ் ராணுவமும் சிறப்பு படைகளும் அண்டை நாடுகளின் […]

Read More

முதல்முறையாக அரிஹந்த் நீர்மூழ்கியில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்ட K-15 ஏவுகணை !!

October 15, 2022

இந்தியா நேற்று தனது அரிஹந்த் அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலில் இருந்து K-15 ரக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் பலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது, அரிஹந்த் நீர்மூழ்கி ஏவுகணையை ஏவுவது இதுவே முதல்முறை என்பது கூடுதல் சிறப்பு ஆகும். முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையானது அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு 750 முதல் 1500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டதாகும். வங்க […]

Read More