
இன்று அதாவது அக்டோபர் 18ஆம் தேதியன்று குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு கண்காட்சியுடன் சேர்த்து இந்திய – ஆஃப்ரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது, இதில் கலந்து கொள்ள 13 ஆஃப்ரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் வருகை தர உள்ளனர்.
இத்தகைய முதல் இந்திய ஆஃப்ரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு கடந்த 2020ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற பாதுகாப்பு கண்காட்சியுடன் சேர்த்து முதல்முறையாக நடத்தப்பட்டது, இந்தியா மற்றும் ஆஃப்ரிக்க நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு துறை உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதே இதன் நோக்கமாகும்.
ஆஃப்ரிக்க நாடுகளின் ஆயுத சந்தையில் வெற்றிகரமாக நுழைந்து இந்திய தயாரிப்பு ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு துறை சார்ந்த அமைப்புகள் தொழில்நுட்பங்கள் மற்றும் மென்பொருட்களை சந்தைபடுத்துவதற்கு இந்த மாநாடு உதவும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த ஆண்டு நடைபெறும் இந்திய ஆஃப்ரிக்க பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டிற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையேற்று பேச உள்ளார் என்பது கூடுதல் தகவலாகும்.