Day: October 7, 2022

சுதேசி தாக்குதல் ஹெலிகாப்டரில் விரைவில் சுதேசி டாங்கி எதிர்ப்பு ஏவுகணை !!

October 7, 2022

சமீபத்தில் இந்திய விமானப்படை மற்றும் தரைப்படையில் சேர்க்கப்பட்ட இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட HAL PRACHAND இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டரில் விரைவிலேயே சுதேசி டாங்கி எதிர்ப்பு ஏவுகணைக பொருத்தப்பட உள்ளது. DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது துருவாஸ்திரா என அழைக்கப்படும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை உருவாக்கி உள்ளது இதனை வரும் 2023ஆம் ஆண்டு பிரச்சந்த் தாக்குதல் ஹெலிகாப்டரில் இணைக்க உள்ளனர். அமெரிக்கா பிரச்சந்த் ஹெலிகாப்டருக்கு அபாச்சி ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் Hellfire ஏவுகணைகளை அளிக்க முன்வந்த […]

Read More

தைவானை முற்றுகையிட்டு சீனா முடக்க நினைத்தால் அதை அமெரிக்க கடற்படை முறியடிக்கும் !!

October 7, 2022

அமெரிக்க கடற்படையின் பசிஃபிக் கட்டளையக தளபதியான அட்மிரல் சாமுயெல் பாப்பேரோ சமீபத்தில் பேசும்போது தைவானை கடல்மார்க்கமாக சீனா முற்றுகையிட்டால் அதனை அமெரிக்க கடற்படை முறியடிக்கும் என கூறியுள்ளார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரான லாய்டு ஆஸ்டின் ஹவாய் மாகாணத்தில் உள்ள அமெரிக்க பசிஃபிக் கட்டளையகத்திற்கு சென்ற போது செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது அட்மிரல் சாமுயெல் சீன கடற்படையிடம் ஒரு கடல்சார் முற்றுகை இடுவதற்கு தேவையான கப்பல்கள் மற்றும் கலன்கள் தாராளமாக உள்ளன, ஆனால் அதனை […]

Read More

அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் தந்திரமாக தைவானை சீனா முடக்கலாம் அமெரிக்க அதிகாரி !!

October 7, 2022

ஒரு பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் சீனா மிகவும் தந்திரமாக திட்டமிட்டு அமெரிக்காவுக்கு கூட சவால் விடுக்கும் வகையில் தைவானை முற்றுகையிட்டு முடக்க முடியும் என தெரிவித்துள்ளார். அதாவது சமீபத்தில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோஸி தைவானுக்கு சுற்றுபயணமாக சென்றதை அடுத்து கடுப்படைந்த சீனா தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சிகளை நடத்தியது. அந்த வகையில் நேரடியாக கடற்படையை தைவானை சுற்றி குவித்து கடல்சார் முற்றுகையிட்டு தைவானை முடக்குவதற்கு பதிலாக மேற்குறிப்பிட்ட வகையில் மறைமுகமாக […]

Read More

பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் புடின் இருக்கும் வரை அது நடக்காது உக்ரைன் அதிபர் !!

October 7, 2022

ரஷ்யா சமீபத்தில் உக்ரைனுடைய சில பகுதிகளை தன்னுடன் இணைப்பதாக அறிவித்த நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி புதிய அரசாணை ஒன்றை கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி பிறப்பித்துள்ளார். அதன்படி உக்ரைன் அரசு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் ஆனால் ரஷ்யாவின் அதிபராக விளாடிமீர் புடின் நீடிக்கும் வரை அது நடக்காது என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் உக்ரைன் அதிபர் வேலோடிமிர் செலன்ஸ்கி கையெழுத்திட்ட நிலையில் அதனை உக்ரைனுடைய தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ […]

Read More