Day: October 6, 2022

ஏவுகணை ஏவி வலிமையை காட்ட முயன்ற போது தளத்திலேயே விழுந்து வெடித்த தென்கொரிய ஏவுகணை !!

October 6, 2022

சமீபத்தில் வடகொரியா ஒரு இடைத்தூர பலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியது, இது சுமார் 4600 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜப்பான் வான்பகுதியை கடந்து பசிஃபிக் பெருங்கடலில் விழுந்தது. இந்த ஏவுகணை சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஜப்பான் மற்றும் அமெரிக்க படைகள் கூட்டாக பயிற்சி மேற்கொண்டன, அதை தொடர்ந்து தென்கொரிய மற்றும் அமெரிக்க படைகள் கூட்டாக பயிற்சி மேற்கொண்டன. அந்த வகையில் வடகொரிய எல்லைக்கு மிக அருகேயுள்ள தென்கொரியாவின் காங்நியூங் 18ஆவது போர் விமான […]

Read More

இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திய உக்ரைன் அதிபர்; உக்ரைன் வருமாறு அழைப்பு !!

October 6, 2022

உக்ரைன் அதிபர் வோலோடீமீர் செலன்ஸ்கி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சமீபத்தில் தொலைபேசி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது இருவரும் பல முக்கிய விஷயங்களை குறித்து கலந்தாலோசித்தனர். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தை மற்றும் சுமுகமான தீர்வை எதிர்நோக்கி இருப்பதாகவும் ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அமைதி காண விரும்பவில்லை எனவும் சமீபத்தில் கூட ஒருதலைபட்சமாக போலியாக பொது வாக்கெடுப்பு நடத்தி உக்ரைனுடைய 15 சதவிகித பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ததையும் […]

Read More

ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை இயக்குனர் கழுத்தறுத்து கொலை வீட்டில் வேலை செய்த பயங்கரவாதியின் கொடூர செயல் !!

October 6, 2022

ஜம்மு காஷ்மீர் காவல்துறை உடைய சிறைப்பிரிவின் தலைவர் ஹேமந்த் குமார் லோஹியா தனது வீட்டில் பணிபுரிந்து வந்த வேலைக்காரனால் கொடூரமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த குற்ற சம்பவம் பற்றி பேசிய ஜம்மு பிராந்திய காவல்துறை கூடுதல் இயக்குனர் முகேஷ் சிங் ஹேமந்த் குமார் லோஹியாவின் வேலைக்காரன் ஜாசீர் தலைமறைவாகி உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் தலைமை இயக்குனர் டிஜிபி தில்பாக் சிங் பேட்டி அளித்த போது இது மிகவும் […]

Read More

தெற்கில் ரஷ்ய படைகளை வீழ்த்திவிட்டு கிழக்கிலும் முன்னேறும் உக்ரைன் படைகள் !!

October 6, 2022

உக்ரைனிய படைகள் தங்கள் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ரஷ்ய படைகளை வீழ்த்திய கையோடு தற்போது கிழக்கு உக்ரைனிலும் வேகமாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது. போர் துவங்கிய பிறகு முதல்முறையாக தெற்கு உக்ரைனில் பாயும் டினிப்ரோ ஆற்றின் கரையோரம் உள்ள பல முக்கிய சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களை உக்ரைன் படைகள் கைபற்றி உள்ளதாக உக்ரைன் அதிகாரிகளும் அங்குள்ள ரஷ்ய ஆதரவு அதிகாரிகளும் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மறுபக்கம் கிழக்கு உக்ரைனிலும் உக்ரைனிய படைகள் அதிவேகமாக […]

Read More

PFI பிடியில் சிக்கியுள்ள கேரள காவல்துறை அதிர்ச்சி தகவல்கள் !!

October 6, 2022

சமீபத்தில் நாடு முழுவதும் அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கு தேசிய புலனாய்வு முகமை தொடர்ந்து தீவிர சோதனைகளை நடத்திய நிலையில் பல முக்கிய PFI தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்திய அரசு PFI அமைப்பு மற்றும் அதனுடைய இதர எட்டு சகோதர அமைப்புகளையும் இந்தியாவில் இயங்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்ததது, தொடர்ந்து அனைத்து அமைப்புகளும் கலைக்கப்மடுவதாக PFI நிர்வாகிகள் அறிவித்தனர். இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் சில அதிர்ச்சிகரமான […]

Read More

காட்டு பன்றியை மோதி வெடித்து சிதறிய பாகிஸ்தான் F-16 போர் விமானம்; அறிந்திராத கதை !!

October 6, 2022

கடந்த 1987ஆம் ஆண்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு தென்கிழக்கே 120 மைல்கள் தெற்கே அமைந்துள்ள மிக முக்கியமான விமானப்படை தளங்களில் ஒன்றான சர்கோதா விமானப்படை தளத்தில் தான் மேற்குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது ஒரு F-16 போர் விமானம் இரவு நேர ரோந்து பணிக்காக புறப்படுவதற்கு வேகமாக ஒடு பாதையில் சென்று கொண்டிருந்த போது ஒடுபாதையில் நுழைந்த காட்டுபன்றியின் மீது முன்பக்க சக்கரம் மோதி உடைந்து போனது இதையடுத்து விமானத்தின் மூக்குபகுதி தரையில் மோதி விமானம் ஒடுபாதையை […]

Read More

லடாக்கில் பிற ஹெலிகாப்டர்களை தோற்கடித்த சுதேசி தாக்குதல் ஹெலிகாப்டர் ப்ரச்சந்த், நமது வீரர்களையே குழப்பிய சுவாரஸ்ய சம்பவம் !!

October 6, 2022

இந்திய விமானப்படையின் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஹெலிகாப்டர் விமானிகளும் சுதேசி இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர் திட்டத்தின் சோதனை விமானிகளுமான க்ரூப் கேப்டன் ஹரி நாயர் மற்றும் விங் கமாண்டர் ஜாண் ஆகியோர் சமீபத்தில் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டரான ப்ரச்சந்த் காளை மாதிரியான வேகமும் வலுவும் ஆக்ரோஷமும் கொண்டது ஆனால் அதே நேரத்தில் கட்டுபடுத்த குழந்தை போன்றது எனவும்,அனைத்து வகையான காலநிலைகளிலும் மிகவும் சிறப்பாக செயல்படும் , இமயமலை பிராந்தியத்திலும் சிறப்பாக […]

Read More

நீரஜ் சோப்ரா வரிசையில் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு இந்திய தரைப்படையில் பணி !!

October 6, 2022

இந்திய தரைப்படை மிஷன் ஒலிம்பிக்ஸ் எனும் திட்டத்தின்கீழ் திறமைமிக்க விளையாட்டு வீரர் வீராங்கனைகளை கண்டறிந்து ஆதரவளித்து போட்டிகளுக்கு தயார் செய்து வருகிறது. அப்படி ஒருவர் தான் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஆவார், இவரது திறமையை கண்டறிந்த இந்திய தரைப்படை இவருக்கு பணி வழங்கியது தற்போது இவர் இந்திய தரைப்படையில் சுபேதாராக பணியமர்த்தப்பட்டு உள்ளார். அந்த வகையில் காமன்வெல்த் போட்டியில் பாக்ஸிங் விளையாட்டில் வெண்கல பதக்கம் வென்ற ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 20 […]

Read More

இந்திய கடற்படைக்கென உருவாக்கப்பட்ட பிரத்தியேக ஆளில்லா விமானம் !!

October 6, 2022

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த Sagar Defense எனும் நிறுவனம் வருணா எனும் ஆளில்லா விமானத்தை உருவாக்கி உள்ளது, இதனால் ஆட்கள் அல்லது பொருட்களை சுமக்க முடியும் ஆனால் இது விமானியில்லா விமானமாகும். ஒரு நபர் அல்லது 130 கிலோ எடையிலான பொருட்களை சுமார் 25 கிலோமீட்டர் தொலைவுக்கு சுமக்கும் திறன் கொண்ட இதனை வான்வழி ஆம்புலன்ஸ் அல்லது சரக்கு போக்குவரத்திற்காக பயன்படுத்தி கொள்ளலாம் என நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான மிருதுல் பப்பார் கூறினார். அதே போல் […]

Read More