Day: October 1, 2022

ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க படைகள் எதற்கும் தயார் அமெரிக்க அரசு !!

October 1, 2022

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் திங்கட்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ரஷ்யா உக்ரைனில் கைபற்றிய பகுதிகள் பற்றிய அமெரிக்க அரசின் பார்வை பற்றியும் அமெரிக்காவின் நடவடிக்கை பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் அமெரிக்கா ரஷ்யாவின் நடவடிக்கையை சட்ட விரோதமாக பார்ப்பதாகவும், ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க படைகள் எதையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும் ஐரோப்பாவை நோக்கி ஏற்கனவே நேட்டோ படைகளை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு அமெரிக்க […]

Read More

மேற்குலக நாடுகளை காட்டமாக விமர்சித்த புடின்; இந்தியாவை சுரண்டியதாகவும் குற்றச்சாட்டு !!

October 1, 2022

உக்ரைனில் கைபற்றிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்து கொள்ளும் விழாவில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் மேற்குலக நாடுகளை மிகவும் காட்டமாக விமர்சனம் செய்தார். அதாவது காலனியாதிக்கம் மூலமாக இந்தியா மற்றும் ஆஃப்ரிக்க நாடுகளை அடிமைப்படுத்தி அந்த நாடுகளின் வளங்களை சுரண்டி கொழுத்தாகவும், சீனாவில் போதை பொருள் விற்க அந்நாட்டுடன் போர் புரிந்து வீழ்த்தியது அமெரிக்காவை அடிமைப்படுத்தி அங்கு வாழ்ந்த மக்களை கொன்று குவித்தது, அடிமை வியாபாரம் செய்தது, உலகம் முழுவதும் பல்வேறு இனக்குழு மக்களை வேட்டையாடி […]

Read More

ரஷ்யா மீதான தீர்மானம் வாக்களிக்காமல் வெளியேறிய இந்தியா மற்றும் சீனா !!

October 1, 2022

நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையான க்ரெம்ளினில் நடைபெற்ற விழாவில் உக்ரைனுடைய நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்தார். இதற்கு முன்னதாக இந்த நான்கு பகுதிகளான டொனெட்ஸ்க், லூஹான்ஸ்க், கெர்சோன் மற்றும் ஸ்ப்ரோஸியா ஆகிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க பொது ஒட்டெடுப்பு நடத்தப்பட்டு அதில் 99% மக்கள் ரஷ்யாவுடன் இணைய ஆதரவாக வாக்களித்ததாக கூறப்பட்டது. இது போலியான முறையில்லாத சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரான வாக்கெடுப்பு என குற்றம் சாட்டப்பட்ட நிலையில் […]

Read More

ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்த இந்திய நிறுவனம் மீது தடை விதித்த அமெரிக்கா !!

October 1, 2022

மும்பை நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனமான Tibalaji Petrochem Private Limited நிறுவனம் ஈரானில் இருந்து மெத்தனால் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களை ஈரானில் இருந்து வாங்கி சீனாவில் விற்பனை செய்த காரணத்தாலும், ஏற்கனவே அமெரிக்காவின் தடை பட்டியலில் உள்ள Triliance, Iran Petrochemical Brokerage Firm, Iran Chemical Industries Investment Company மற்றும் Middle East Kimiya Pars Company ஆகியவற்றுடனும் இணைந்து வர்த்தக செயல்பாடுகளை மேற்கொண்ட காரணத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க […]

Read More