
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமானது உக்ரைனுக்கான ராணுவ உதவியாக சுமார் 1.1 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவி திட்டத்தை அறிவித்துள்ளது.
அதன்படி உக்ரைனுக்கு 18 HIMARS High Mobility Artillery Rocket Systems எனப்படும் பல குழல் ராக்கெட் லாஞ்சர்கள்
150 HMMWVS Armoured High Mobility Multipurpose Wheeled Vehicles எனப்படும் நான்கு சக்கர கவச வாகனங்கள், 150 இதர வாகனங்கள்,
கனரக தளவாடங்களை நகர்த்த உதவும் 80 கனரக லாரிகள் மற்றும் 40 கனரக இழுவை லாரிகள் (Trailer), இரண்டு ரேடார் அமைப்புகள்,
20 பல உபயோக ரேடார்கள், ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகள், கண்காணிப்பு அமைப்புகள், பாதுகாப்பு மிக்க தகவல் தொடர்பு கருவிகள்,
வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் அமைப்புகள், குண்டு துளைக்காத கவச உடைகள், பயிற்சி மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான நிதி உதவி என அனைத்தும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014ஆம் ஆண்டு அமெரிக்கா உக்ரைனுக்கு சுமார் 19 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவி வழங்கப்படும் என அறிவித்த நிலையில் 2021 ஜனவரி முதல் இதுவரை 16.9 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவிகளை அளித்துள்ளது அதில் இந்த ஆண்டு ஃபெப்ரவரி மாதம் முதல் இதுவரை 16.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவிகளை அளித்துள்ளது கூடுதல் தகவல் ஆகும்.